மீண்டும் மீண்டும் அவமானப்பட்ட ராதிகா..அடிக்க கை ஓங்கிய கோபி.. ராதிகா எடுத்த முடிவு.. இன்றைய எபிசோட்
சென்னை: பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் மகா சங்கமத்தில் நேற்று எபிசோடில் பாக்கியா, கோபியின் மனைவியாக மேடைக்கு ஏறியதை ராதிகாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கோபிக்கு பதிலடியாக பாக்கியா பேசியதை பார்த்து கடுங் கோபத்தில் ராதிகா எடுத்த முடிவால் கோபி ரூம்பை விட்டு வெளியே கிளம்பி இருக்கிறார்.
கோபியின் நிலைமையை பார்த்து மூர்த்தியும் எழிலும் கலாய்த்து இருக்கின்றனர்.

அவார்டு ஃபங்ஷனில் கலாட்டா
பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மகா சங்கமம் நடந்து வருகிறது. இதில் இன்றைய எபிசோட்டில், மேடையில் கோபியின் மனைவி என பாக்கியாவை அழைத்ததால் ராதிகா கடும் கோபத்தில் ரூமுக்கு சென்று விடுகிறார். அவார்ட் கொடுக்கும் பங்க்ஷனில் நடந்த விஷயங்களை ராமமூர்த்தி சக குடும்ப உறுப்பினர்களிடம் கூறி சிரித்துக் கொண்டிருக்கிறார். எழில் மூர்த்தி எல்லாம் பாக்யா செய்தது தான் சரியானது என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் மீனா ஜீவாவின் வருகைக்காக மேக்கப் போட்டுக் கொண்டு தலை நிறைய பூவை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்.

மீனாவுக்கு கிடைத்த பல்பு
கடைசியில் கதவைத் தட்டும் ஓசையை கேட்டதும் ஓடி வந்து கதவை திறந்து மீனா பார்த்த போது அங்கே மீனாவின் அம்மா வந்து மீனாவுக்கு பல்பு கொடுத்து விடுகின்றனர். இதனால் காண்டான மீனா கடுப்பாகி புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் அறைக்கு வந்த ராதிகா கடும் கோபத்தில் இருப்பதை பார்த்து கோபி அவரை சமாதானம் செய்யும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் ராதிகா நீங்களும் சேர்ந்து திட்டம் போட்டு தான் இதை எல்லாம் பண்ணுகிறீர்கள் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கூறுகிறார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என கோபி புரிய வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அப்போ அவங்களுக்கு எப்படி அந்த பங்க்ஷன் நடக்கிறது தெரியும் என்று ராதிகா கேட்கிறார்.

ராதிகாவிடம் மாட்டிய கோபி
மோகன் தான் அங்கே வரச் சொல்லி பாக்யாவை அழைத்து இருப்பான் என்று கோபி கூறினாலும், அதை ராதிகா ஏற்றுக் கொள்வதாக இல்லை. கோபியின் மனைவியை மேடைக்கு அழைக்கிறோம் என்று சொன்னதும் நான் ஆசை ஆசையாக எழுந்து நின்றேன் ஆனால் அவங்க பாக்கியாவை வந்து கூட்டிகிட்டு போயிட்டாங்க. நான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டேன் என ராதிகா கத்திக் கொண்டிருக்கிறார். ராதிகா கோபத்தில் கண்ணை உருட்டி பேசுவதை பார்த்து பயந்து போன கோபி, பவ்யமாக மோகனுக்கு நம்முடைய திருமணம் தெரியாது அதனால்தான் இப்படி நடந்து விட்டது என்று கூறுகிறார். நீங்கள் ஏன் சொல்ல வேண்டியது தானே என்று ராதிகா கேட்கிறார்.நேரம் கிடைக்கல அதான் சொல்லவில்லை என்று கோபி கூறுகிறார்.

கோபத்தில் கோபி எடுத்த முடிவு
கோபியும் ராதிகாவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா, இதுவே நான் விருது வாங்கினால் உங்களை ஒரு ஓரமா உட்கார வச்சுட்டு, புருஷனை வேற ஒருத்தனை அழைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?என கேட்க, ராதிகாவை அடிக்க கை ஓங்குகிறார். சும்மா சொன்னதுக்கே உங்களுக்கு இப்படி இருக்கு? நேர்ல பார்த்த எனக்கு எப்படி இருக்கும் ?என ராதிகா சொல்ல, உன்கிட்ட பேச முடியாது நான் வெளியே போகிறேன் என்று ரூம் கதவை திறந்து வைத்துவிட்டு வெளியே நின்று பேசுகிறார். அப்போது ராதிகாவும் வராதிங்க அப்படியே போயிருங்க என்று கூறுகிறார். இவர்கள் இருவருடைய சண்டையும் வெளியே நின்று எழிலும், மூர்த்தியும் பார்த்து சிரிக்கிறார்கள்.

குத்தி காட்டிய ராமமூர்த்தி
அடுத்ததாக அனைவரும் புல்வெளியில் அமர்ந்து மீண்டும் ஆட்டம் பாட்டத்தோடு என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வெளியே இருந்து கோபி இவர்கள் சந்தோஷப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த ராமமூர்த்தி என் குடும்பம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது பாரு. நீ நரகத்தில் இருக்கிற மாதிரி சொர்க்கத்தை தேடி போனாயே? என்னிடம் நீ சொன்னாலா 25 வருஷமா என்னை நரகத்தில் வைத்திருந்தீர்கள் என்று, இப்ப பாரு என்ன ஆச்சு ?ஒரே வாரத்தில் சண்டை ,என காரி துப்பிக்கிறார் .இனிமேதான் உனக்கு நரகம் என்றால் என்னவென்று தெரியும் என்று கோபியிடம் பேசுகிறார். கோபியும் இவர்கள் ஆடி பாடி கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே தன்னுடைய அப்பாவான ராமமூர்த்தி பேசுவதை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் மேலும் அவமானம்
அடுத்த நாள் காலையில் கணவன் மனைவி புரிதலை மதிப்பிடும் வகையில் அங்கே ஒரு போட்டி நடக்கிறது. அதில் கோபியின் அப்பா அம்மா பங்கேற்று பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்குகிறார்கள். அதே போல் கண்ணனும் ஐஸ்வர்யாவும் பங்கேற்று கொள்கிறார்கள். அதில் கண்ணன்7 மதிப்பெண்ணும், ஐஸ்வர்யா ஒன்பது மதிப்பெண்ணும் வாங்குகின்றனர். அதற்குப் பிறகு மூர்த்தி தனம் ஜோடிக்கும் போட்டி நடக்கிறது. அதில் அவர்கள் இருவரும் பத்துக்கு பத்து மதிப்பெண்கள் வாங்கி விடுகிறார்கள். அப்போது அங்கே வந்த ராதிகா மற்றும் கோபியை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அணியினர் கூறுகின்றனர். அதில் ராதிகா கோபியை பற்றிய புரிதலில் ஐந்து மதிப்பெண்கள் வாங்குகிறார். ஆனால் கோபி ராதிகாவை பற்றிய புரிதலில் ஜீரோ மதிப்பெண் வாங்குகிறார் .மீண்டும் மீண்டும் பாக்கியா குடும்பத்திடம் அவமானப்படும் ராதிகா காண்டாகி ரூமுக்கு வந்து ஊருக்கு கிளம்ப ரெடி ஆகிறார். கோபி எதுவும் பேசாமல் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் .அதேபோல பாக்கியலட்சுமி மற்றும் மூர்த்தியின் குடும்பத்தினரும் ஊருக்கு கிளம்ப ரெடி ஆகி பரஸ்பரமாக கிளம்புகிறோம் என்று பேசி கொண்டிருக்கின்றனர். இத்தோட இன்றைய எபிசோடு முடிவடைந்து விட்டது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications