முதல் முறையாக தப்பை உணர்ந்த ஈஸ்வரி எடுத்த சூப்பர் முடிவு.. கோபியின் பாடு தான் இனி திண்டாட்டம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் முதல் முறையாக ஈஸ்வரி தன்னுடைய தப்பை உணர்ந்து பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கோபியின் விஷயத்தில் இவ்வளவு நாட்களாக பாக்யா பேச்சை கேட்காதது தவறு என்று ஈஸ்வரி பேசியது யாரும் எதிர்பார்க்காதது தான்.

திருமணம் முடிந்தது
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கோபியின் திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று அவருடைய அம்மா ஈஸ்வரி அப்பா இனியா என மூவரும் ஆட்டோவில் வந்திருந்தனர். ஆனால் இவர்கள் மண்டபத்திற்குள் வருவதற்குள் கோபி ராதிகாவின் கழுத்தில் தாலியை கட்டி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபியின் அம்மாவான ஈஸ்வரி கோபியை கண்ட மேணிக்கு மணமேடையில் இருக்கும் போது திட்டி தீர்த்து இருக்கிறார்.

அம்மாவின் மன வேதனை
எப்படி எல்லாம் உன்னை பத்தி பெருமையா பேசி இருக்கிறேன். ஆனால் இனி என் முகத்திலேயே முழிக்காதே என்று ஈஸ்வரி அம்மா கோபியை திட்டுகிறார். நீ கோயிலில் வைத்து என்கிட்ட பேசணும்னு கால் பண்ணி சொன்னபோது கூட அப்படி ஒரு தாய் பாசத்தில் நான் ஓடி வந்தேன். அப்ப வரைக்கும் கூட உன்னை நினைச்சு நான் பரிதாப பட்டேன். எல்லாரையும் விட்டுட்டு என் பிள்ளை எங்கேயோ கஷ்டப்படுறானே என்று பரிதாப பட்டேன். எல்லாமே வீணா போச்சு! ஆனா நீ எல்லாமே ரொம்ப தெளிவா பிளான் பண்ணி இருக்க.. என்று கோபத்தில் பேசுகிறார்.

பிளான் எல்லாம் தெரிஞ்சு போச்சு
அப்போது கோபியின் அப்பாவான குருமூர்த்தி இவன் பாக்கியாவுக்கு தெரியாமலே டைவர்ஸ் பண்ணிக்கிட்டு அதுக்கு பிறகு பாக்யாவுக்கு தெரிந்ததால் மீண்டும் பாக்கியாவை டைவர்ஸ் பண்ணிகிட்டதால்தான் தைரியமா கல்யாணம் பண்ணுகிறான், பாக்யாவுக்கு மட்டும் தெரியாமல் இருந்திருந்தால் இவன் பாக்யாவையும் ஏமாற்றிவிட்டு ராதிகாவையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இரண்டு இடத்துலயும் குடித்தனத்தை பண்ணி இருப்பான். பிராடு பைய என்று தன் பங்குக்கு திட்டுகிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் என்னங்க இது, எங்க வீட்டுக்கு வந்து ஒவ்வொருத்தங்களா அவமானப்படுத்தினது போதாது என்று இப்போ எங்க சொந்தக்காரங்க முன்னாடியும் வந்து இப்படி பண்ணனுமா என்று கேட்கிறார்.

தப்பை உணர்ந்த ஈஸ்வரி அம்மா
மேலும் ஈஸ்வரி அம்மா கோபியிடம் கடும் கோபத்தில் இனி எங்களுக்கு மகனே கிடையாது. இதற்கு முன்னாடி சொன்ன மாதிரி எல்லாம் இல்லை. நான் உலகத்திலேயே அதிகமாக மரியாதை வச்சிருக்கது என் புருஷன் மட்டும்தான். அவர் மேல சத்தியமா சொல்றேன் உன் முகத்தில் இனி நான் முழிக்கவே மாட்டேன். இனி நீயும் வராத, நாங்க செத்தாலும் வராத என்று பேசுகிறார். அப்போது வந்த பாக்யாவிடம் இவனுக்காக நான் உன்கிட்ட நான் கோபப்பட்டது ரொம்ப தப்பு பாக்கியா..!! என்ன விட இவனை நீ தான் நல்ல புரிஞ்சு வச்சிருக்க. இவன் ஒரு துரோகி. பெத்த வயிறு எரிஞ்சு சொல்கிறேன். நீ நல்லாவே இருக்க மாட்ட என்று கோபிக்கு சாபம் விடுகிறார். இதுதான் இன்றைய எபிசோடு, இனி கோபி எடுக்க போகும் முடிவு தான் என்ன என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications