"டி.என்.ஏ டெஸ்ட் முடிவு" மகிழ்ச்சியில் பாரதி..வெண்பா எடுத்த முடிவு.. லீக் ஆனது கிளைமாக்ஸ் முடிவு?
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்த டி என் ஏ டெஸ்ட் முடிவு வெளியாகி விட்டது.
கடைசி நேரத்தில் டி என் ஏ டெஸ்டில் இப்படி ஒரு சுவாரசியத்தை வைப்பார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
திருமண மண்டபத்தை விட்டு வெளியேறிய வெண்பா கடைசியில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை செய்துவிட்டார்.

நெடுநாள் தொடரும் கூட்டணி
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதியாக அருண் பிரசாத் நடித்து வருகிறார். கண்ணம்மாவாக ஆரம்பத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்தார். தற்போது அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இவர்களுக்கு எதிரியாக வெண்பா கேரக்டரில் பஃரீனா நடித்து வருகிறார். இவர்களுடைய கூட்டணியில் இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் நெட்டிசன்களால் ஆரம்ப முதலே அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

பேக்கை கையில் எடுத்த கண்ணம்மா
பாரதியிடம் கோபப்பட்டு கண்ணம்மா பேக்கை கையில் எடுத்து தெரு வீதியில் நடந்ததை வைத்து அதிகமாக ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். அதற்குப் பிறகு கண்ணம்மாவின் குழந்தைகளுக்கு அப்பா பாரதி தான் என்பதே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லி பலரும் பலவிதமாக மீம்ஸ் மட்டும் இல்லாமல் கமாண்டுகளிலும் கருத்து தெரிவித்து வந்தனர் .இந்த சீரியல் ஆரம்பத்தில் அந்த அளவிற்கு பிரபலம் அடையாமல் இருந்தாலும் நெட்டிசன்கள் கலாய்த்ததால் அதிக அளவில் ரீச் ஆகிவிட்டது

பாரதி எடுத்த திடீர் முடிவு
ஏற்கனவே இரண்டு முறை டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாலும் அதில் வெண்பா புகுந்து நாடகமாகி கடைசி நேரத்தில் டெஸ்ட் கண்ணம்மாவுக்கு எதிராகவே வந்துவிட்டது .இந்த நிலையில் மூன்றாவது முறையாக பாரதி டெஸ்ட் எடுக்க கொடுத்து இருக்கிறார். அதுவும் வெண்பாவிற்கு தெரியாமலே இவர் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் வெண்பா கற்பமாக இருப்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதியிடம் அழுது, நடித்து உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என்று பாரதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார்.

கடைசி நேரம் முடிவு
நாளை திருமண நடக்க இருக்கும் நிலையில் பாரதி டெஸ்ட் ரிசல்ட்டில் ஹேமா மற்றும் லட்சுமி தன்னுடைய குழந்தைகள் என்பது தெரிந்து விட்டால் தான் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு விடுவதாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்தது குறித்து டாக்டர் போன் செய்ததாகவும் அதில் பாரதியின் குழந்தைகள்தான் ஹேமா மற்றும் லட்சுமி என்பது தெரிந்து விட்டதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்தநிலையில் வெண்பா பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கு ஆக திருமண மண்டபத்தில் இருந்து ஓடி வந்து விடுகிறார் .இந்த நிலையில் பாரதிக்கு உண்மையெல்லாம் தெரிந்ததும், அவர் வெண்பாவை வேண்டாம் என்று சொல்லி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளப் போகிறார் .அப்போது தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்த விரக்தியில் வெண்பா தற்கொலை செய்து கொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் இயக்குனர் என்ன ட்விஸ்ட் வைக்க போகிறாரோ என்று எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications