கடைசியில் டிஎன்ஏ ரிசல்டில் மாற்றம்..குழப்பத்தில் பாரதி.. கண்ணம்மாவின் அதிரடி அவதாரம்!சூப்பரான முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் பாரதி குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
டெஸ்ட் ரிசல்ட் வருவதற்கான நேரம் கடைசி நேரத்தில் மாற்றி விட்டதால் என்ன முடிவெடுக்க என்று தெரியாமல் பாரதி திணறி வருகிறார்.
கண்ணம்மா வெண்பாவின் வீட்டு வேலைக்கார பெண் சாந்தியின் மூலமாக மொத்த திட்டத்தையும் அனைவருக்கும் அம்பலப்படுத்தி விட்டார்.

வெண்பாவிற்கு கிடைத்த அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசொட்டில் ஆரம்பத்தில், வெண்பா மண்டபத்திலிருந்து தப்பித்த நிலையில் பாரதிக்கு போன் செய்கிறார். அதே நேரத்தில் பாரதி டிஎன்ஏ ரிசல்ட் காக காத்துக் கொண்டிருக்கிறார் .அப்போது நான் மண்டபத்தில் இருந்து தப்பிச்சுட்டேன் பொன்னியம்மன் கோவிலுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன் ,நீ கோவிலுக்கு வெளியே காத்துகிட்டு இரு, அங்க ஒரு பூக்கடை அக்கா கிட்ட மாலைக்கு சொல்லி இருக்கேன் என வெண்பா பாரதி இடம் வளவளவென பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு யோசித்தபடியே இருந்த பாரதியை பார்த்து வெண்பா, நீ கோவிலுக்கு வந்து விட்டாயா? என்று கேட்பதற்கு, பாரதி இல்லை நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்று சொன்னதும் வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

பாரதியின் புது பிளான்
என்னை ஏமாத்திடாத பாரதி? நீ வரலைன்னா நான் இப்படியே காரை எங்கேயாவது விட்டு ஆக்சிடென்ட் பண்ணி இறந்து போய் விடுவேன் என்று பாரதியை வெண்பா மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் காண்டான பாரதி கோவில் என் வீடு பக்கத்தில் தானே இருக்கிறது. அதனால் பத்து நிமிஷத்துக்குள் வந்துவிடலாம் என்று தான் நான் கிளம்பவில்லை. நீ வருவதற்குள் நான் அங்கே சென்று இருப்பேன் என்று கூறுகிறார். அப்போது டெஸ்ட் ரிசல்ட் வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் இருக்கிறது. அதற்குள் நாம் கோயிலுக்கு சென்று காத்திருப்போம் ரிசல்ட் தெரிந்த பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று பாரதி கிளம்புகிறார்.

நடித்து மாட்டிக்கொண்ட சாந்தி
அடுத்த பக்கத்தில் வெண்பா காணாமல் போனதை நினைத்து ரோஹித்தின் அம்மா புலம்பி கொண்டிருக்கிறார். எல்லோரும் சொன்னார்கள் பெரிய இடத்தை கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று, நான் கேட்கவில்லையே என்னுடைய மகன் இப்போது கேவலப்பட்டு கொண்டு நிற்கிறான் என்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது ஷர்மிளாவும் புலம்பி கொண்டிருக்கிறார் .அதே நேரத்தில் சாந்தி நாம அமைதியா இருந்தா சந்தேகம் வந்துவிடும் என்று டிராமா போட்டு அழுகிறார். இதனால் கண்ணம்மா மற்றும் ரோகித்க்கு சாந்தியின் மீது சந்தேகம் வருகிறது. இதனால் சாந்தியிடம் கண்ணம்மா விசாரனையை தொடங்குகிறார்.

அருவாமனையை கையில் எடுத்த கண்ணம்மா
ஆரம்பத்தில் சத்தியமாக எனக்கு வெண்பா அம்மா எங்க போனாங்க என்று தெரியாது என்று சாந்தி அழுதபடியே கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் கன்னத்தில் ஓங்கி அறைந்து கண்ணம்மா இன்னொரு அவதாரத்தை எடுத்தபடியே மிரட்டலாக கேட்கும் போது சாந்திக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. அதே நேரத்தில் அருவாமனையை கழுத்தில் வைத்து சாந்தியை மிரட்டி கண்ணம்மா கேட்க சாந்தி வெண்பா பாரதியை திருமணம் செய்வதற்காக தான் மண்டபத்தை விட்டு போயிருக்காங்க என்று சொல்லவும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைந்து இருக்கிறது. அடுத்த வாரத்தில் பாரதி மற்றும் வெண்பா திருமணம் நடக்குமா? அல்லது பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்டில் அவருடைய குழந்தைகளுக்கு அவர்தான் அப்பா என்பது தெரியுமா? என்ற உண்மை தெரியவரும். அடுத்த வாரத்தோடு இந்த சீரியல் முதல் பாகம் முடிவடைந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.












Click it and Unblock the Notifications