விரட்டப்படும் பாரதி..கண்ணம்மாவின் முடிவு.. மீண்டும் சேர்வதற்கு பாரதிக்கு கிடைத்த எதிர்பாராத வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை தேடி பாரதி அவருடைய சொந்த ஊருக்கே வந்த நிலையில் ஊர்காரர்கள் அவரை பஞ்சாயத்து முன்னிலையில் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

பஞ்சாயத்தில் அனைவரும் ஒன்று கூடி பாரதியை ஊரை விட்டு செல்லும்படி விரட்டி அனுப்ப கண்ணம்மாவுக்கு புது பிரச்சனை தொடங்கியிருக்கிறது.

பாரதியின் முடிவு

பாரதியின் முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில ஊர் பஞ்சாயத்தில், பாரதி புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள் தலையிட நீங்க எல்லாம் யாரு? இங்க இருக்கிற தலைவர்கள் தான் அறிவு இல்லன்னா ஊர்காரர்களும் அவ்வளவு பேரும் குடும்ப பிரச்சனையை பார்க்கறதுக்கு வந்துட்டீங்களா? என கேட்க அனைவரும் பாரதியை அடிக்கப் பாய்கின்றனர். பின்பு சண்முகம் 10 வருஷம் உங்க வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு, 10 வருஷமா நீ கண்ணமாவை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி இருக்கான்னு எல்லாம் எங்களுக்கு தெரியும். கையில் இருக்கிற கட்டை அவுத்து விட்டோம் ஊரை விட்டு ஓடி போயிரு சொல்ல, பாரதி தான் ஊரை விட்டு போக மாட்டேன் என்று உறுதியாக கூறுகிறார்.

கண்ணம்மாவின் அதிரடி முடிவு

கண்ணம்மாவின் அதிரடி முடிவு

பிறகு கண்ணம்மா இந்த விஷயத்தில் நீ என்ன சொல்ற என ஊர் தலைவர்கள் கேட்க, அதற்கு அவரோட பேசுவதில் விருப்பமில்லை அவரை பார்க்கவும் விருப்பமில்லை, அவர் இந்த ஊர்ல இருக்கறதுலயும் எனக்கு இஷ்டம் கிடையாது என சொல்ல, பாரதி அதிர்ச்சி அடைகிறார். ஊர் மக்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். பிறகு ஊர் தலைவரின் மகனாக இருக்கும் பாண்டி கண்ணம்மாவிடம் நான் உங்களை பஞ்சாயத்தில் பார்த்தேன் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அந்த டாக்டர் உங்களை நெருங்க முடியாது நான் ஏற்கனவே உங்களை திருவிழாவில் பார்த்திருக்கிறேன் என சொல்ல, நான் இதற்கு முன்பு இந்த ஊருக்கு வந்ததே கிடையாது என கண்ணம்மா சொல்ல, சரி ஓகே இனி அந்த டாக்டர் உங்க கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணுனா எனக்கு போன் பண்ணுங்க என சொல்ல டாக்டருக்கும் எனக்கும் ஆயிரம் விஷயம் இருக்கும். அவர் என்னுடைய புருஷன் அதில் நீக்க தலையிட வேண்டாம் என்று கண்ணம்மா கூறி அசிங்கப்படுத்தி விட்டு செல்கிறார்.

சௌந்தர்யாவின் கேள்வி

சௌந்தர்யாவின் கேள்வி

பாண்டியை கண்ணம்மா அசிங்கப்படுத்தியதை பார்த்து பாண்டியில் கூட்டாளிகள் என்ன கண்ணம்மா சரிப்பட்டு வர மாட்டாளா? என கேட்க போக போக நம்ம வழிக்கு கொண்டு வந்து விடலாம் என எகத்தாளமாக பாண்டி பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சௌந்தர்யா பாரதிக்கு போன் போட்டு கண்ணம்மா பற்றி விசாரிக்க,பாரதி கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன் என சொல்ல பக்கத்தில் இருந்த கணபதி போனை வாங்கி இங்க நடந்த விஷயங்களை சொல்கிறார். ஊரே உங்களுக்கு எதிராக இருக்கும்போது நீ என்ன பண்ணுவ பாரதி என கேட்க இந்த உலகமே எதிர்த்தாலும் நான் சென்னைக்கு கண்ணம்மா மற்றும் குழந்தைகளுடன் தான் திரும்பி வருவேன் என சொல்லி பாரதி போனை வைக்கிறார்.

பூஜாவின் திடீர் மயக்கம்

பூஜாவின் திடீர் மயக்கம்

அடுத்ததாக கண்ணம்மா ஸ்கூலில் சாப்பாடு செய்து முடிக்கிறார். அங்கே வந்த பாட்டி சாப்பாடு செஞ்சாச்சா என கேட்க கண்ணம்மா எல்லாம் முடிந்தது என சொல்ல, நீ வந்த பிறகு தான் எனக்கு எவ்வளவோ வேலை குறைவாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு டீச்சர் ஓடி வந்து நீங்க வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கி இருக்கிங்களா அவருடைய பேத்தி மயங்கி விழுந்துட்டா என சொல்ல, மூவரும் பதறி அடித்து ஓடுகின்றனர். பிறகு பூஜா இப்படித்தான் அடிக்கடி மயங்கி விழுகிறாள் என்று அந்த பாட்டி கூற, கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். பின்பு பூஜாவை தண்ணீர் தெளிய வைத்து குடிக்க வைத்து பூஜாவிடம் பேசும்போது எனக்கு இப்படித்தான் எப்பவும் நடக்குது ஆரம்பத்தில் பயமாக இருந்து இப்ப பழகிப்போச்சு என்று சர்வ சாதாரணமாக சொல்ல கண்ணம்மா யோசித்தபடியே இருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+