கண்ணம்மாவுக்கு எதிராக நடிக்கும் தாமரை.. பாரதிக்கு கிடைக்கும் மகிழ்ச்சி.. எதிர்பாராத கடைசி முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியோடு கண்ணம்மாவை சேர்த்து வைக்க வேண்டும் என்று தாமரையும் அவருடைய அப்பாவும் புது நாடகத்தை தொடங்குகின்றனர்.
கண்ணம்மாவிற்கு தொழில் ரீதியாக பிரச்சனையாக பாண்டி வருகிறார்.
கண்ணமாவோடு சேர்ந்து வாழ்வது போன்று பாரதி கனவு காண்கிறார்.

அது கனவு பாரதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கண்ணம்மா புது வண்டி எடுத்து சாமி கும்பிட்டு கொண்டு இருக்கும்போது, பாரதி கண்ணம்மாவோடு பைக்கில் சுற்றுவது போன்று கனவு காண்கிறார். கடைசியில் கணபதி பாரதியை நிஜ உலகத்திற்கு வரவேற்கிறார். கண்ணம்மாவிற்கு பைக் ஓட்ட தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்த பாரதிக்கு ஏமாற்றம் கொடுக்கும் விதமாக கண்ணம்மா பாரதியின் முன்பு ஸ்டைலாக குழந்தைகளோடு பைக்கில் கிளம்புகிறார். அடுத்ததாக கடைகளுக்கு சரக்கு எடுத்து சென்று டெலிவரி செய்கிறார். பைக் எடுத்ததும் கண்ணம்மா டக்கு டக்கு வேலை செய்வதாக தாமரை பாராட்ட பெண்களுக்கு எப்போதுமே வண்டி ஒரு துணை தான் அது கண்டிப்பாக வேண்டும் என்று கண்ணம்மா அறிவுரை கூறி கொண்டிருக்கிறார்.

பாண்டிக்கு இனி தான் பிரச்சனையே
அடுத்ததாக பாண்டி செய்யும் பிசினஸ்களில் கணக்கு பார்த்து எந்தெந்த தொழிலில் எவ்வளவு லாபம் என்று சொல்லி கொண்டிருக்க, அப்போது மசாலா தொழிலில் மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம் என சொல்ல, பாண்டி தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை நஷ்டம். நஷ்டத்துக்கு என்ன காரணம் என கேட்க? கண்ணம்மா தான் என நண்பர்கள் சொல்ல, அப்போ அந்த கண்ணம்மாவை பார்ட்னர் ஆகிடலாம் என வில்லத்தனத்தோடு முடிவெடுக்கிறார்.

தாமரையின் அப்பா நல்லாவே நடிக்கிறார்
அடுத்ததாக வீட்டிற்கு கண்ணம்மா வந்ததும் தாமரையோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தாமரையின் அப்பா மூச்சு விட முடியாமல் நெஞ்சு வலிக்கிறது என சத்தம் போட்டு டிராமா போட, தாமரையும் கண்ணம்மாவும் பதறி கொண்டு டாக்டரிடம் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க பாரதியை அழைக்கலாம் என தாமரை சொல்ல அதற்கு கண்ணம்மா முதலில் மறுப்பு தெரிவித்து, பின்பு சரி என சம்மதம் சொல்கிறார். அங்கு போனதும் பாரதியிடம் தாமரையின் அப்பா டிராமா என்பதை சொல்லிவிட அவர் ஏதோ புதுவித வைரஸ் மாதிரி இருக்கு கூட இருக்கிறவங்களுக்கும் தொற்றும் அதனால் அவங்க கூட இருக்கறவங்களையும் செக்கப் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி தாமரையை செக்கப் செய்கின்றனர்.

செம ரொமான்ஸ் தான்
அடுத்ததாக கண்ணம்மாவை செக்கப் செய்ய அழைக்க கண்ணம்மா வேண்டாம் என்று முதலில் மறுத்துக்கொண்டிருக்க பிறகு தாமரையும் அவரது அப்பாவும் குழந்தைகளுக்கு இது பரவி விடக்கூடாது என்று சொன்னதற்கு பிறகு உட்கார சென்றார். பிறகு பாரதி பரிசோதனை செய்வது போல கண்ணம்மாவை தொட்டு பார்த்து ரொமான்ஸ் செய்கிறார். கண்ணம்மாவின் கண்களை பார்த்து பாரதி சொக்கி போய் இருக்க கணபதி பாரதியை கிண்டல் செய்கிறார். பின்பு செக்கப் ஓவர் என சொல்லி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications