சன் டிவி சீரியலில் அறிமுகமாகும் பாவனி, அமீர்..!!??இது என்ன திடீர் ட்விஸ்ட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாவனி மற்றும் அமீர் சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சன் டிவி சீரியல் நடிகை உடன் பாவனி மற்றும் அமீர் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
சீரியலில் திருப்புமுனைக்காக இப்படி ஒரு ஏற்பாடா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் ஆனால் பாவனி மற்றும் அமீர் தரப்பில் இருந்து இதைப் பற்றி எதுவும் தகவல் தெரிவிக்கவில்லையே என்றும் பலர் குழம்பி வருகிறார்கள்.

ரோஜா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகி ரோஜா கேரக்டரில் பிரியங்கா நல்கரி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சிபு சூரியன் நடித்து வருகிறார். இவர்கள் இருவருடைய ஜோடி பொருத்தத்தை ரசிகர்கள் அதிகமாக ரசித்து வருகிறார்கள். அதனால் தான் சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்திலும் இவர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். பல நெட்டிசன்கள் இந்த சீரியல் வைத்து கலாய்த்து கொண்டிருந்தாலும் சீரியலின் டிஆர்பி குறைந்த பாடு இல்லை.

ஜோடி சேர்ந்த புது அணி
ரோஜா சீரியல் நடிகை உடன் ரசிகைகள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டு வருகின்றனர். அடிக்கடி ரோஜா சீரியல் நடிகை தன்னுடைய ரசிகர்களுடன் போட்டோக்கள் எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனாலும் தற்போதைய புகைப்படங்கள் வேற லெவலில் வரவேற்பு பெற்று வருகிறது. அதற்கு காரணம் அவர்களுடைய குரூப்பில் பிக்பாஸ் பாவனி மற்றும் அமீர் இருவரும் இணைந்து இருக்கின்றனர். பாவனியோடு நெருக்கமாக பிரியங்கா நல்கரி போஸ் கொடுத்திருக்கிறார். இவர்கள் அணியில் எப்படி பாவனி மற்றும் அமீர் சேர்ந்தார்கள் என்று பலரும் குழம்பி போயிருக்கிறார்களாம்.

அடிக்கடி வரும் மறதி ஞாபகம்
ரோஜா சீரியலில் அடிக்கடி திருப்பங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ஒவ்வொருவருக்காக மறதி ஞாபகத்தை கொண்டு வந்து விடுகிறார்கள். இதற்கு முன்பு செண்பகம் பழசை எல்லாம் மறந்து இருந்தார். தற்போது அதுபோல ரோஜா பழசை எல்லாம் மறந்து, தான் யார் என்பதை தெரியாமல் இருந்து வருகிறார். இதனால் சில ரசிகர்கள் இந்த சீரியல் மீது கடுப்பு இருப்பதால் சீரியலில் விறுவிறுப்பு கூட்டுவதற்காக பாவனி மற்றும் அமீர் இருவரும் சீரியலில் அறிமுகமாக இருக்கிறார்களா? என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

காத்திருக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி மற்றும் அமீர் இருவரும் காதல் வாழ்க்கையில் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் போது திரைப்படங்களில் ஒன்றாக நடிப்பதாக மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இருவரும் சீரியல் நடிகைகளுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் ரோஜா சீரியலில் நடிக்க இருக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்த சீரியலை நாங்கள் பார்க்க ரெடி என்று பாவனியின் தீவிரமான ரசிகர்கள் இப்போதே அப்டேட்டுக்காக காத்திருக்க தொடங்கி இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications