Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி வாழ்க்கையில் யாரும் வேண்டாம்...ரசிகர்களின் மனதை உருக வைத்த பாவனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாவதாக வாழ்க்கையில் வந்தவர் மனதை அதிகமாக காயப்படுத்தி விட்டார் என்று ரசிகர்களின் மனதை உருக வைத்திருக்கிறார் பாவனி.

ஏற்கனவே மனதில் ரனத்தோடு இருக்கும் போது மீண்டும் அந்த தப்பை நான் செய்ய மாட்டேன் என்று பாவனி கூறியதுதான் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

தன்னுடைய வாழ்க்கையில் இனி யாருக்கும் இடமில்லை என்று பாவனி, இமான் அண்ணாச்சியிடம் பேசியிருப்பது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.

சின்னத்தம்பியின் நந்தினி

சின்னத்தம்பியின் நந்தினி

சின்னத்திரையில் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் பவானி ரெட்டி என்னும் பெயரைச் சொன்னதுமே அனைவருக்கும் தெரிந்துவிடும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் நந்தினி என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்துவிடும். அந்த அளவிற்கு பிரபலமான இவர் இளைஞர்கள் மத்தியிலும் பரிச்சயமான நபர்தான். சமூக வலைத்தளத்தில் இவருடைய ட்ரெடிஷனல் போட்டோஸ்கள் முதல் ஹாட் போட்டோஸ்கள் வரை எல்லாமே டாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சீரியல்களில் சிலகாலமாக நடிக்காமல் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தான் இருந்து கொண்டிருக்கிறார்.

Recommended Video

    Bigg Boss வீட்டில் கணவரை பற்றி வருந்திய Pavani Reddy | Kamal Hassan
    பிக்பாஸில் அறிமுகம்

    பிக்பாஸில் அறிமுகம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ வான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் இவருடைய பெயரும் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருந்தது. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா?? இல்லையா?? என்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால், முதல் நாளில் இவருடைய என்ரியை பார்த்ததும் ரசிகர்கள் செம ஹாப்பியா ஆகிவிட்டனர் நம்ம தலைவி வந்துவிட்டார் என்று ஆதரித்து வந்தனர் இந்த சீசனில் அதிகமான புது முகங்கள் இருந்தாலும் இவர் பலருக்கும் பரிச்சயமான நடிகையாக இருப்பதால் இவருக்கு அதிகமான சான்ஸ் பேச்சுக்கள் தொடங்க ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

    அதிகரிக்கும் ஆர்மி பேஜ்கள்

    அதிகரிக்கும் ஆர்மி பேஜ்கள்

    முதன் முதலாக இவருடைய பெயரில்தான் ரசிகர்கள் ஆர்மி பேஜ்களை அமைத்தனர். ஆனாலும், இப்போ வரைக்கும் இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவருடைய சொந்த வாழ்க்கையைப்பற்றி இவர் இந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பது ரசிகர்களுக்கு பலருக்கும் வேதனையை கொடுத்திருக்கிறது. இவரைப் பற்றி தெரிந்த பலர் இதுதான் உண்மையா என்று இவருக்கு சப்போர்ட் செய்தும் வருகின்றனர். தன்னுடைய காதல் கணவர் இறப்பு இவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை இவர் ஒவ்வொரு முறையும் வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.

    வெறுத்துப்போன திருமண வாழ்க்கை

    வெறுத்துப்போன திருமண வாழ்க்கை

    இவருடைய கணவரின் இறப்புக்குப் பிறகு இவர் இரண்டாவது திருமணமும் செய்து விட்டார் என்று பல்வேறு வதந்திகள் கிளம்பி வந்தது. இந்த நிலையில் தான் இரண்டாவது திருமணம் செய்யவில்லை அதற்கு முன்பு சில கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து விட்டேன் என்று இவர் நேற்றைய எபிசோட்டில் இமான் அண்ணாச்சியிடம் பேசியிருப்பது பற்றி ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இனி என்னுடைய வாழ்க்கையில் யாருமே வேண்டாம் நான் தனியாகவே இருந்து கொள்கிறேன் என்று வேதனையை சிரிப்போடு கூறியிருக்கிறார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+