'கனவு காணும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோலங்கள்’’..பிக்பாஸ் பாவனி ரெட்டியின் கண்ணீர் கதை'..
சென்னை: வாழ்க்கையில் தனக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று சிலர் கூறுவார்கள், அது பாவனியின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
Recommended Video
சின்ன வயதில் தன்னுடைய காதல் கணவரை இழந்து அவர் சமுதாயத்தில் பட்ட கஷ்டங்கள் அனைவருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அழகாக எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்குள் இவ்வளவு சோகமா என ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

பெரிய சோகம் தான்
நடிகைகள் என்றாலே பலருக்கும் பரிச்சயமான நபராக மாறி விடுவார்கள். ஆனால், சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கும் பாவனியை பற்றி தெரிந்து கொண்டதும் அவருடைய ரசிகர்கள் கண் கலங்கி போய் இருக்கின்றனர். இந்த மாதிரி எந்தப் பெண்ணுக்கும் இனி வாழ்க்கையிலேயே நடக்கக் கூடாது என்று பாவனி மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் கூறிவருகின்றனர். தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு தனது காதல் கணவர் தான் முக்கியம் என்று இவர் அவருடன் சென்ற பிறகு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் தான் பெரியதாக இருக்கிறது.

சின்னத்திரை வாய்ப்புகள்
இவர் திருமணத்திற்கு முன்பு ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் அது அவருக்கு செட் ஆகாது என தெரிந்ததும் சினிமாவில் சேருவதற்காக பல முயற்சிகளை எடுத்து ஒருவழியாக சினிமாவில் நடிப்பதற்கான பயிற்சிகளையும் எடுத்துக் கொண்ட பிறகு சின்னத்திரையில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. அந்த நேரத்தில் தான் இவருக்கு அவருடைய காதல் கணவருடன் நட்பு கிடைத்திருக்கிறது, பின்பு அதுவே காதலாக மாறிவிட்டது.இவர்களது காதலை வீட்டிற்கு சொன்னதும் இவருடைய அம்மா அதனை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதனால் வீட்டை விட்டு வெளியேறி தனது கணவருடன் ஒன்றாக வாழ ஆரம்பித்து விட்டார்.

பிரம்மாண்டமாக திருமணம்
இவர் தனது காதலருடன் நான்கு வருடமாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்து இருக்கிறார்.பின்பு இவர்கள் இருவரும் ஒரு வீட்டை கட்டுவதற்காக முயற்சியில் இறங்கி அந்த வீட்டை கட்டி முடித்து விடுகின்றனர். இந்த நிலையில் அவர் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து பிரமாண்டமாக திருமணத்தை முடித்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இவர் முதல் முறையாக கருவுற்றிருக்கிறார். இதனால்தான் சிரீயலிருந்து இவர் விலகி விடலாம் என முடிவெடுத்து இருந்த நேரத்தில்தான் இவருக்கு முதல் சோகம் ஏற்பட்டிருக்கிறது. இவர் குழந்தைகள் வேண்டும் என்பதில் ரொம்பவே ஆசையாக இருந்த நேரத்தில் முதல் குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது.ஆனாலும் தனது காதல் கணவரின் பாசத்தால் அதிலிருந்து மீண்டு வந்த இவர் மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கையின் பேரதிர்ச்சி
தனது காதல் கணவரின் மார்பில் தான் இவர் தினமும் தூங்குவார் அந்தளவிற்கு இவர் மீது பாசம் வைத்திருக்கும் நிலையில், கணவர் ஒரு நாள் அதிகமாக குடித்துவிட்டு வந்திருக்கிறார் அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் இவர் கோபத்தோடு பாத்ரூம் உள்ளே சென்று விட்டார் இவர் கதவை பூட்டிக்கொண்டதால் ஆத்திரமடைந்த அவர் கணவர் பெட்ரூம் கதவை மூடிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கோபத்தில் தான் அவர் ரூமுக்குள் உட்கார்ந்து இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த இவர்..பின்பு சிறிது நேரம் கழித்து அவரை சமாதானம் செய்வதற்காக கதவை தட்டி இருக்கிறார்..ஆனால் கதவு திறக்கவில்லை. அதற்கு பிறகுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருக்கிறார்.

குடியால் மாறிய வாழ்க்கை
எப்போதுமே இவர் மீது அதிகமான பாசத்தில் அவருடைய கணவர் இருந்ததால்தான் திருமணம் செய்யாவிட்டாலும் நான்கு வருடமாக இவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சகஜமாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு திருமணம் முடிந்தும் ஒன்றரை வருடங்கள் சந்தோஷமாக தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அன்று அளவுக்கதிகமாக மது அருந்தியதால் தான் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டு அதனால் ஒரு உயிரே போய் இருக்கிறது. அதற்கு பிறகு பாவனி வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று இவர் கூறியதைக் கேட்டதும் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர். அதனாலேயே ரசிகர்கள் பலர் தயவுசெய்து இந்த குடியை விட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications