மிரட்டிய நமிதா..மிரண்டுபோன பாவணி... முகமே மாறி போச்சு
சென்னை: கணீர் குரலால் பேசிய நமிதாவை பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டார்கள்.
பாத்திரம் கழுவுவதில் பிரச்சனையை தொடங்கியிருக்கும் மூன்றாவது ப்ரோமோ வைரலாக பரவி வருகிறது.
கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்த பாவணி திடீரென்று நடக்கும் பிரச்சனையை பார்த்து திகைத்துப் போய் இருக்கிறார்.

பிரச்சனை தொடங்கிடுச்சி
நாலு பேர் ஒன்றாக இருந்தாலே அங்கு வாய்க்கா வரப்பு பிரச்சனை வந்துவிடும். இங்கே ஒரே வீட்டில் 18 பேர் உட்கார்ந்து இருக்கும் போது பிரச்சனை வராமலா இருக்கும். தற்போது பாத்திரம் கழுவுவதில் பிரச்சனையை தொடங்கியிருக்கிறார் நமிதா. இவருடைய பேச்சை கேட்டதும் சக போட்டியாளர்கள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத பிரியங்கா எப்போதும் போல தனது வேலையை ஆரம்பித்து விட்டார்.

சவுண்ட் அதிகமா இருக்கு
பிரச்சனை என்று வந்தால் உடனே ஆஜர் ஆகி விடும் பிரியங்காவை பார்த்ததும் நமிதா கம்ப்ளைன்ட் பண்ணி கொண்டிருக்கிறார். உடனே நாட்டாமை ஆன பிரியங்கா, தனக்கே உரிய கெக்கத்தோடு பஞ்சாயத்தை தொடங்கிவிட்டார். இவர் பஞ்சாயத்து பேசத் தொடங்கியதும், இந்தா நான் வாரேன்...கேமரா தன் பக்கம் திரும்பியதும் சவுண்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் அபிஷேக். அனைவரும் அமைதியாக இருக்கும் போது இவருடைய எக்ஸ்பிரஷன் வேற லெவலில் இருக்கிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
கூட்டம் கூட்டமாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் என்ன என்டர்டைன்மென்ட் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள் போல. போட்டிகள் இன்னும் தொடங்காததால் இவர்களின் கச்சேரி ஜாலியாகத் தான் போய் கொண்டிருக்கிறது. இவர்கள் செய்யும் செயல்களுக்கு சமூக வலைத்தளத்தில் கிடைக்கும் எதிர்ப்புகளும், வரவேற்புகளும் இவர்களுக்கு தெரியாததால் இப்படி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அபிஷேக் பற்றி நெட்டிசன்கள் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

மிரண்டு போன பாவணி
இதில் ஒரு சில போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ஆர்மி அமைத்து சப்போர்ட் செய்து கொண்டிருக்கின்றனர். அதில் பாவணி ரெட்டியும் ஒருவர். இவருக்கு ஏற்கனவே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஃபாலோவர்ஸ்களும், ரசிகர்களும் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்கள் பலமடங்கு அதிகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் பரிச்சயமான முகமாக இவர் இருப்பதால் இவருக்கு பிளஸ் பாயிண்டாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தற்போது நமிதா பேசிய வார்த்தைகளை கேட்டதும் அவருக்கு ஆதரவாக பிரியங்கா பேசிக்கொண்டிருக்கும்போது மிரண்டுபோய் பாவணி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்களின் மனது சிதறி போச்சு
சிரித்த முகமாக இவர் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று பிரியங்காவிற்கு பதில் சொல்ல அபிஷேக் கத்திப் பேசி கொண்டிருப்பதை பார்த்ததும் இங்கே ஏதும் பிரச்சனையா என்று அனைவரும் ஒரு நிமிடம் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரசிகர்களின் கண்களுக்கு பாவணி ரெட்டி மட்டும் ஸ்பெஷலாக தெரிகிறாராம். இவர் அழுதாலே தாங்கிக் கொள்ளாத ரசிகர்கள், தற்போது சிரித்துக் கொண்டிருந்த இவர் திடீரென்று முகம் மாறியதை பார்த்ததும் பலபேர் மனது உடைந்து போய் விட்டதாம். அதனாலே எங்க செல்லத்தை ஃபீல் பண்ண வைக்காதீங்க என்று பலர் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications