பிக் பாஸ் 6: பிக் பாஸ் வீட்டில் நடந்த ஐந்தாம் நாள் சம்பவங்கள்.. இன்னும் ட்ரெய்னிங் வேணும்..!!
சென்னை:மிகப் பிரமாண்டமாக துவங்க பெற்று பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 ல் வீட்டிற்குள் ஐந்தாவது நாள் நிகழ்வுகளில் பெரிய அளவு சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டாலும், போட்டியாளர்கள் குறித்த ஒரு சில சந்தேகங்களும், அவர்களைப் பற்றிய புதிய கருத்துக்களையும் பார்வையாளர்களிடம் பெற்றிருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
எபிசோடுகளில் போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகள் மட்டுமே காட்டி வரும் நிலையில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் இவர்கள் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து விடுகிறார்கள்.
இதனால் இவர்கள் நன்றாக நிகழ்ச்சியை பார்த்து ரெடியாகி தான் வந்திருக்கிறார்கள் என்று என்ன தோன்றுகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

முடிவுக்கு வந்த ரீல்ஸ் பிரச்சனை
தனலட்சுமி- ஜி.பி.முத்து இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து கருத்து கூறிய ஜனனி, இது ரீல்ஸ் இல்ல பிக் பாஸ் வீடு என்று சொல்லப்போக இதுதான் தனக்கான நேரம் என்று ஆயிஷா நினைத்தாரோ! என்னவோ!? தனலட்சுமி இடம் நன்றாக பத்த வைக்க தனலட்சுமியும் அதற்கேற்றார் போல் பிக் பாஸ் வீட்டிற்குள் பொங்கி விட்டார்.ரீல்ஸ் பிரச்சனையே பட்டும் படாமல் போய்க்கொண்டிருக்க தனலட்சுமி இடம் இதைப் பற்றி நேரடியாக பேசிய ஜனனி தான் எதையும் மனதில் வைத்து தவறாக கூறவில்லை என்றும்,தனக்கு தனலெட்சுமி ரீல்ஸ் பற்றி தனக்கு தெரியாது என்றும் தங்கள் நாட்டில் அது தடை செய்யப்பட்ட ஒன்று என்று விளக்கி கூறி மன்னிப்பு கேட்க ஓரளவுக்கு அந்த பிரச்சனை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.

அசல் கோளார்வின் அவசர கோளாறு
மற்றொரு போட்டியாளரான அசல் கோளார் ஆர்வக்கோளாறில் குயின்சியை சீண்டுவதுமாக இருக்கிறார்.இது ரசிகர்களிடையே கோளார் மீது கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிரிக்கெட் வீரர் ராம் பெரும்பாலும் தாய்க்குலங்கள் ஆதரவுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் சுற்றி வருகிறார். இதற்குத்தான் ராமை கிரிக்கெட் அணிகள் எடுக்கவில்லையோ!? என்று பார்வையாளர்கள் கலாய்க்கும் அளவிற்கு பார்ப்பவர்களிடம் பாரபட்சம் இல்லாமல் கடலை வறுத்துக் கொண்டிருக்கிறார்.

ரட்சிதாவை ரவுண்டு கட்டும் ராபர்ட்
வழக்கம்போல் தனக்கு பிளஸ் ஆக இருக்கும் ஹோம்லி லுக்கை கையில் எடுத்த ரட்சிதா சேலையுடன் வீட்டிற்குள் பவனி வந்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் ஆகா ஓகோ என்று பார்வையாளர்களை விட ஒரு படி மேலே போய் ரச்சிதாவை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறனர். நம்ம ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை இம்ப்ரஸ் பண்ண முயற்சி பண்ணுகிறாரோ!? என்று தோன்றும் அளவுக்கு மாஸ்டர் ராபர்ட் இன் நடவடிக்கைகள் இன்று இருந்ததாக ராபட்டை பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

போட்டியாளரை குறித்த புதிய கருத்து
பெரும்பாலும் எந்த பக்கம் கேமரா திரும்பினாலும் அந்த கூட்டத்தில் ஒருவராக டான்ஸ் மாஸ்டர் சாந்தி இருப்பதாகவும், சாந்தியின் நடவடிக்கை இயல்பாக இல்லை என்றும், பார்த்தாலே பிக் பாஸ் போட்டிக்காக நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது என்றும் பிக் பாஸ் 6 சீசனின் ஐந்தாவது நாள் சாந்தியின் நடவடிக்கையை பார்த்தவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். என்றாலும் இன்றைய கிளப்ஹவுஸ் டாஸ்க் வின்னர்களாக சாந்தியும், ஜி.பி முத்து தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஓவர் ஆல் பிக் பாஸ் வீட்டின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி கொஞ்சம் சுமார் ரகம்தான் என்று நிகழ்ச்சி குறித்த தங்களது அபிமானத்தை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications