எத்தனை எதிர்பாராதது...கமலின் அடுக்கு வார்த்தைகளால் திகைத்துப் போன ரசிகர்கள்
சென்னை: சனிக்கிழமை ப்ரோமோ என்றாலே எப்போது கமல் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு எப்போதும்போல இல்லாமல் புதுவித தரிசனத்தை தந்து அசத்தியுள்ளார்.
வழக்கமான பஞ்ச் டயலாக் பேசாமல் புதுவிதமாக அடுக்கு மொழியில் பஞ்ச் பேசி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த கமலின் வார்த்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடைய இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த வாரம் நடந்த பல எதிர்பாராத விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒரு சில விஷயங்கள் ரசிகர்கள் இப்படித்தான் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தது போல நடைபெறவில்லை என்று பலர் வருத்தத்தோடு இருக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கமல் பேசி இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கமலின் அடுக்கு மொழி பேச்சு
சனிக்கிழமை எபிசோட் என்றாலே லேட்டாக வரும் ப்ரமோவில் கமல் பேசும் வார்த்தைகளை கேட்பதற்காக ஒரு கூட்டம் சமூகவலைத்தளத்தில் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு புரியாத வகையில் அடுக்கு மொழியில் பேசிய ப்ரமோ அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வாரத்தில் எந்த பஞ்சாயத்தும் பெரிய அளவில் ஏற்படவில்லை என்பதால் கமல் இன்று என்ன பேசுவார் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் குழப்பத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

புது விளக்கம்
எப்போதும் கமல் பேசும் எதிர்பாராததை எதிர் பாருங்கள் எனும் வார்த்தை இன்று பல்வேறு முறை ப்ரமோவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான அர்த்தம் தான் வேறு விதமாக இருக்கிறது. எதிர்பாராததை எதிர் பார்த்து விட்டோம், இருப்பினும் எதிர்பாராதது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது... எதிர்பாராத இருவர் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு இடங்களுக்கு வந்துவிட்டனர்... இறுதிவரை போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த ஒருவர் பணப்பெட்டியோடு வெளியேறிவிட்டார், என்று கமல் முகத்தில் ஹை லெவல் எக்ஸ்பிரஷனோடு கூறியிருக்கிறார்.

எதிர்பார்க்காத வாரம்தான்
கமலின் பர்பாமன்ஸ் பார்த்ததும் ரசிகர்கள், ஆமாம் நாங்களும் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று பலரும் கூறி வருகின்றனர். ரசிகர்கள், நிரூப் இரண்டாவதாக சேவ் உண்மையானது அல்ல தாமரைச்செல்வி தான் அந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று தங்களுடைய ஆதங்கங்களை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இது எதிர்பார்க்க முடியாத சீசன் ஆகத்தான் இருக்கிறது என்றும் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications