பிக் பாஸ்க்கு பிறகும் தொடரும் வன்மம்.. ஆரி அர்ஜுன் போட்ட ட்வீட்... பதிலுக்கு அர்ச்சனா போட்ட பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இந்த சீசன் வெற்றியாளர் குறித்த சர்ச்சைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வாகி இருந்தார். ஆனால் அர்ச்சனா வெற்றி பெற்றது பி ஆர் டீம் உதவியோடு தான் என்று அவருக்கு எதிராக சிலர் சமூக வலைத்தளத்தில் இப்போதும் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுன் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்காக ரசிகர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் வைக்க, அதற்கு அர்ச்சனா பதில் கமெண்ட் கொடுத்து இருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து சர்ச்சைகளும் பிரச்சனைகளும் தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு கமல்ஹாசன் மீதே இந்த சீசனின் அதிகமான குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதுபோல பிரதீப் ஆண்டனி வெளியேற்ற பட்ட பிறகு நாங்கள் பிக் பாஸ் பார்க்க மட்டும் என்று பல ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் அச்சனாவுக்கு 19 கோடி வாக்குகள் போடப்பட்டு அவர் வெற்றி பெற்று இருக்கிறார்... இதை நம்ப முடியவில்லை என்பதும் பலருடைய வாதமாக இருக்கிறது. அதேபோல மாயா மீது கடும் கோபத்தில் இருந்த மக்களுக்கு அர்ச்சனாவிற்கு டைட்டில் கொடுத்ததும் கோபம் குறைந்து விடும் என்று பிக் பாஸ் நினைத்து இருந்தனர். ஆனால் அப்போது மாயாவின் ரசிகர்கள் மாயாவிற்கு டைட்டில் கொடுக்காமல் விட்டது தப்பு மாயாதான் டைட்டிலுக்கு பொருத்தமானவர்.
அர்ச்சனா பிஆர் டீம் உதவியோடு தான் 19 கோடி வாக்குகள் பெற்றிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர். இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தான் அவர்கள் இருவருடைய கேங்குக்கும் இடையே அதிகமாக வன்மம் அடிக்கடி வெடித்துக் கொண்டிருந்தது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து ஏ மற்றும் பி என்ற குரூப்பிசம் பண்ணி தங்களுடைய வன்மத்தை கொட்டிக் கொண்டிருந்தனர்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் கூட இவர்கள் இணையத்தில் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வெற்றி பெற்ற அர்ச்சனா இதுவரைக்கும் அமைதியாக இருந்த நிலையில் நேற்று முதல் முறையாக பேட்டிக் கொடுக்க தொடங்கி இருக்கிறார். அதில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது குறித்து அங்கு நடந்த சூழ்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக கொட்டியிருந்தார்.

இந்த நிலையில் அர்சனாவுக்கு எதிராக மீண்டும் மாயா கேங் சோசியல் மீடியாவில் அப்யூஸ் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரி அர்ஜுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கெஞ்சி கேட்கிறேன் யாரையும் ட்ரோல் பண்ணாதீங்க.
தேவையில்லாமல் போட்டியாளர்களை திட்ட வேண்டாம். விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருந்தால் சரி, அதை தாண்டி அநாகரீகம் ஆன முறையில் பேசுவதை தவிர்க்கவும்" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த அர்ச்சனா அந்த பதிவிற்கு ரெஸ்பெக்ட் என்று நன்றி தெரிவித்து ரீ போஸ்ட் செய்திருக்கிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications