Julie கையில் என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சிம்பிளா வந்தாலும்.. வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸ் ஜூலி மாதிரி யாருமே விமர்சனங்களைச் சந்தித்திருக்க முடியாது. அத்தனை வசவுகளையும் வாங்கிக் கொண்டு, தன் பாதையில் ஜம்மென்று நடை போட்டுக் கொண்டிருக்கிறார் ஜூலி.

வழக்கமான நடிகைகள் செய்வது போலத்தான் இவரும் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார். டிவிட்டர் ஆகட்டும், இன்ஸ்டாகிராம் ஆகட்டும், ஜூலியும் புகுந்து விளையாடிக் கொண்டுதான் உள்ளார்.

குறிப்பாக லாக்டவுன் சமயத்தில் இவர் ரிஸ்க் எடுத்ததெல்லாம் போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். அந்த அளவுக்கு டெடிகேஷனும் இவரிடம் இருக்கிறது. அப்படித்தான் இப்போதும் சில க்யூட்டான படங்களைப் போட்டுள்ளார்.

அப்படியும் இப்படியும்

அப்படியும் இப்படியும்

மேக்கப் எதுவும் போடாமல் சிம்பிளாக சில போட்டோக்களைப் போட்டுள்ளார் ஜூலி. இப்படி போட்டோ போட்ட ஜூலியை பார்த்து ஜூலிக்கு தில்லு அதிகம் தான் என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.அப்படி வந்தாலும் தப்பு இப்படி வந்தாலும் தப்பா என்று அவருக்கு வக்காலத்து வாங்கவும் தனிக் கூட்டம் இருக்கிறது. அதேசமயம், ஜூலி போஸ்ட் போட்டதும் ஸ்பெஷல் இருக்கும்னு ஓடிவந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அவர்கள் எதிர்பார்த்த மேட்டர் வேற போல.. அது இல்லைன்னதும் சப்புன்னு ஆயிப் போச்சு.

அந்த சிரிப்பு இருக்கே

அந்த சிரிப்பு இருக்கே

எதிர்பார்த்து ஓடி வருபவர்களின் எதிர்பார்ப்பே வேற.. அந்த மாதிரி இந்த மாதிரி என்று அலை பாய்வது அவர்களின் வழக்கம். ஆனால் இது வேற லெவல் போட்டோஷூட்டாக இருக்கிறது. மேக்கப் எதுவுமில்லாமல் அனைவரும் ஷாக் ஆகுற மாதிரி போஸ்ட் போட்ட ஜூலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. எப்படிப் பார்த்தாலும் அழகாதான் இருக்குது என்று ரசிகர்கள் உருக தவறவில்லை. ஜூலிக்கு மட்டும்தான் இந்த இலக்கணம் ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது என்பதும் ரசிகர்களின் கருத்துதான்.

என்னவா இருக்கும்

என்னவா இருக்கும்

போகிற போக்கில் அப்படியே போட்டோ எடுத்த ஜூலி அதை தன்னுடைய ரசிகர்களும் பார்த்து ரசிக்கட்டும் என்று இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார். இவருடைய போட்டோவை பார்த்ததும் இவருடைய முகத்தை பார்க்காமல் ரசிகர்கள் இவருடைய மடியில் வைத்திருக்கும் பொருள் என்ன என்றுதான் கேட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு அது க்யூரியாசிட்டியை தூண்டி விட்டுள்ளது. பழைய டேப்ரெக்கார்டர் ஒன்றை மடியில் வைத்து அதையே பார்த்து பீல் பண்ணியிருக்கிறார் ஜூலி.

இப்ப அப்படிலாம் இல்ல

இப்ப அப்படிலாம் இல்ல

இவருடைய பீலிங்கை புரிந்துகொண்ட ரசிகர்கள் உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் பார்வைக்கு வந்த ஜூலியை பலரும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திட்டி தீர்த்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் உருவாகிவிட்டது. இவருடைய துறுதுறு கேரக்டரையும் குழந்தைத்தனமான பேச்சையும் ரசிக்கும் ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் பேஜ்களையும் ஓபன் பண்ணி வருகின்றனர். அதில் இவர் எடுக்கும் போட்டோஸ்கள் அதிகமாக வலம் வருகிறது.

நெகட்டிவ் குறைந்தாச்சு

நெகட்டிவ் குறைந்தாச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி ஒரு மாடலாக மாறிவிட்டார். பல மாடலிங் போட்டோசூட் களையும் எடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது மீண்டும் விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செமையாக பர்பாமன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவருக்கு இந்தத் திறமை எல்லாம் இருக்கிறதா என்று இவரை திட்டும் ரசிகர்கள் கூட பீல் பண்ணி வருகிறார்கள். அதனால் தான் அதிகமாக இருந்த நெகட்டிவ் கமெண்டுகள் கூட இப்போது குறைந்து விட்டது.

இப்போ நார்மல் தான்

இப்போ நார்மல் தான்

போட்டோசூட் என்றாலே அதிகமான மேக்கப்பில் விதவிதமான உடையில் வலம் வரும் இவர். இப்போ நார்மல் உடையில் மேக்கப் எதுவுமில்லாமல் தன்னைச்சுற்றி பொம்மைகள் இருக்கும்படி இவரும் அந்த பொம்மைகள் கூட்டத்தில் ஒருவராக இருந்துகொண்டு அழகாக புன்னகைத்து இருக்கிறார். இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். திரிஷா மாதிரி இருக்கீங்கன்னு சிலர் கொளுத்திப் போட்டு இருக்கின்றனர்.

இது வேற லெவல்

இது வேற லெவல்

அதேபோல இன்னொரு போட்டோவையும் அவர் போட்டுள்ளார். காஸ்ட்யூமே கலக்கலாக இருக்கிறது. எடுப்பான முன்னழகையும், தனது முடியழைகயும் தூக்கி எடுப்பாக காட்டியபடி க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. ஜூலியை எப்படிப் பார்த்தாலும் ரசிகர்களுக்கு ஹேப்பிதான். ஜூலி தனது பிறந்த நாளை கடந்த மாதம் இதே நாளில்தான் கொண்டாடியிருந்தார். கொண்டாட்டம் முடிந்து ஒரு மாதம் போனது கூட தெரியலை.. இன்னும் அதுதொடர்பான போட்டோக்கள்தான் கண்ணிலேயே இருக்கு என்றும் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.

ஜூலிக்குப் பிடிச்சது

ஜூலிக்குப் பிடிச்சது

ஜூலிக்கு ரொம்பப் பிடிச்சது எது தெரியுமா.. தான் எடுத்த போட்டோக்களை டிசைன் டிசைனாக எடிட் செய்வதுதானாம். அதை மாதிரி வேற ஒரு சுவாரஸ்யமான விஷயம் எனக்குத் தெரியலை. என்னை விதம் விதமாக புகைப்படம் எடுத்து அதை விதம் விதமாக எடிட் செய்து அழகூட்டுவது ரொம்பப் பிடிக்கும் என்று கூறுகிறார் ஜூலி. அப்படிப் பார்த்தால் இவரது புகைப்படங்களுக்கான எடிட்டிங்கையும் இவரேதான் செய்கிறாரா என்றும் சிலர் கேட்டுள்ளனர். பாவம் பாப்பாவுக்குத்தான் எத்தனை வேலைடா சாமி என்றும் சிலர் அக்கறையுடன் அங்கலாய்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+