மாலையும் கழுத்துமாக பிக் பாஸ் ஜூலி..கூடவே சின்னத்திரை நடிகர்.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை; பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஜூலி தற்போது கழுத்தில் மாலையோடு இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
ஜூலி தற்போது சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.
அந்த சீரியலில் நடித்து வரும் நடிகரோடு அவர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த ஜூலி அதைவிட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேற லெவலில் பிரபலம் அடைந்து விட்டார். ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு அதிகமான சப்போர்ட் இருந்த நிலையில் திடீரென்று ஓவியாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இவரை அதிகமான ரசிகர்கள் திட்ட தொடங்கிவிட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்வின் எதிரொலி இப்ப வரைக்கும் ஜூலிக்கு வெளியே செல்லும் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அதற்குப் பிறகு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருந்த கெட்ட பெயரை எல்லாம் ஜூலி ஓரளவுக்கு குறைத்துவிட்டார். அதற்கு முன்பெல்லாம் போட்டோ ஷூட் நடத்தி வந்த ஜூலி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டாலே நெகட்டிவ் கமெண்ட்கள் தான் அதிகமாக வந்து கொண்டே இருக்கும்.
அதில் ஆரம்பத்தில் எந்த கமெண்ட் களுக்கும் பதில் கொடுக்காமல் சிரித்தபடியே அதை கடந்து சென்று வந்த ஜூலி பின்பு கடுப்பாகி ஒரு முறை நானும் எத்தனை நாட்கள் தான் இதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருப்பேன் என்று நெட்டிசன்களை திட்டி தீர்த்து இருந்தார். ஆனாலும் அவருக்கு நெகடிவ் கமெண்ட்கள் குறைந்தபாடில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு அதிகமான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்திருந்த ஜூலிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலிக்கு அதிகமான பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைத்திருக்கிறது. அதன் காரணமாகவே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அவருக்கு முக்கியமான கேரக்டரில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வெற்றியை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கும் ஜூலி தற்போது திடீரென்று அந்த சீரியலில் வெற்றியின் அண்ணனோடு மாலையும் கழுத்துமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலில் ட்விஸ்க்காக இப்படி புகைப்படம் வெளியாகியிருக்கிறதா? அல்லது இவர்கள் இருவருக்கும் வேறு ஏதும் இருக்குமா? என்று எல்லாம் சமூக வலைதளத்தில் கமெண்டுகள் குவிகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications