பிக் பாஸ் ஜூலியா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! வீட்ல விசேஷமாம்.. அவரே பகிர்ந்த வீடியோ!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் போட்டியாளராக அறிமுகமாகி பிரபலமான மரிய ஜூலி தன்னுடைய பிறந்தநாள் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழைகளை பொழிகின்றனர். அதோடு அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறாரே என்று பலரும் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிலருக்கு பிரபலம் கிடைத்துவிடும். அது போல தான் ஜூலிக்கும். ஜூலி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல்தான் போட்டியாளராக அறிமுகமானார். அதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கம்பீரமாக குரல் கொடுத்து பெரிய அளவில் பிரபலமானார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் ஜூலிக்கும் அதில் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீசனில் அதிகமானோர் பாடகர்கள் ஆகவும், நடிகர்களாகவும் சினிமா சம்பந்தப்பட்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் ஜூலி மட்டுமே சோசியல் மீடியா பிரபலமாக அந்த சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் போட்டியாளர்
முதல் சீசன் தான் இப்ப வரைக்கும் பலராலும் மறக்க முடியாத எதார்த்தமான சீசனாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜூலி நெகட்டிவ் ஆகவே பிரபலம் அடைந்து விட்டார். முதலில் ஐயோ பாவம் என்று பலருடைய அனுதாபத்தை பெற்ற ஜூலி ஓவியாவுடன் நடந்த சண்டைக்கு பிறகு இவரா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு பலருடைய வெறுப்பை சம்பாதித்து இருந்தார். ஆனால் தன் மீது கொண்ட வெறுப்பை மக்கள் மனதில் இருந்து மாற்ற வேண்டும் என்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டு ஐயோ பாவம் இந்த பொண்ணு என்று சொல்லும் அளவிற்கு பலருடைய அனுதாபத்தை பெற்றுக்கொண்டார்.

பாசிட்டிவ் கமெண்ட்ஸ்
ஆரம்பத்தில் சோசியல் மீடியாவில் ஜூலி போஸ்ட் போடும்போது எல்லாம் நெகட்டிவ் கமெண்ட் குவிந்து கொண்டிருக்கும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு மெல்ல மெல்ல நெகட்டிவ் குறைந்து இப்போது சோசியல் மீடியாவில் இவருடைய போஸ்டுக்கு ஒன்லி பாசிட்டிவ் கமெண்ட் என்று வந்து கொண்டிருக்கிறது. அதிலும் சில நாட்களாக சீரியல் சினிமா என்று எதிலும் தலை காட்டாமல் இருந்த ஜூலியின் லேட்டஸ்ட் வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
அதை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போய், என்ன ஜூலி இப்படி மாறிவிட்டார் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஜூலி உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். இன்று அவருடைய பிறந்த நாளாம். தன்னுடைய நண்பர்களோடு பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து இருக்கிறார்கள். சிலருக்கு மட்டும் நன்றி தெரிவித்து கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.
சீரியலில் நடிப்பு
சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வில்லியாக ஜூலி நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் அதை தொடர்ந்து சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் தலை காட்டாமல் இருக்கிறார். இந்த நிலையில் இப்போது அவர் மீண்டும் சீரியலுக்கு வர வேண்டும் என்றும் பலர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications