முத்துக்குமரனின் ஆபாச வாட்ஸ்அப் சாட்.. அடுத்தடுத்து லீக் செய்யும் வாஹதா.. பஞ்சாயத்து பெருசு போல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது இன்ஸ்ட்டா பிரபலம் வாஹதா கடந்த வாரம் பல குற்றச்சாட்டுகளை சொல்லியிருந்தார். அதோடு தற்கொலை முயற்சிக்கு காரணம் கூட முத்துக்குமரன் தான் என்று வீடியோக்களும் வெளியிட்டு இருந்தார். இதனாலே பதறிபோன முத்துக்குமரன் வாஹதா மீது கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்து இருந்தார். ஆனாலும் வாஹதா மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு முத்துக்குமரன் பற்றி பல வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷார்ட்டுகளையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

சோசியல் மீடியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுத்து வந்த முத்துக்குமரன் மீது வாஹதா என்ற இன்ஸ்டா பிரபலம் கொடுத்த புகார் தான் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுவும் அந்த பெண், மது குடித்தபடியே தான் தற்கொலை முயற்சி செய்ததாக வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். இதனால் பல விமர்சனங்கள் வந்தது.

Bigg Boss Muthukumaran

இன்ஸ்ட்டா பிரபலம் குற்றச்சாட்டு

அதோடு அந்த வீடியோவில் அந்த பெண் இதற்கு முன்பு தான் பலரை காதலித்தேன், அதனால் பிரேக்கப் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் தான் முத்துக்குமரன் என்னுடைய வாழ்க்கையில் வந்தார். அவரை ரொம்பவே நம்பினேன், எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் கூட அவர் என்னுடன் உடலுறவில் ஈடுபட்டார். திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டார். இதனால் எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் தான் நான் தற்கொலை பண்ண போகிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் அவரை நல்வாய்ப்பாக அவருடைய நண்பர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர்.

முத்துக்குமரனுக்கு பிரச்சனை

இப்போது சிகிச்சை முடிந்து தனது வழக்கமான பணிகளையும் வாஹதா செய்து வருவதாக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே நேற்று அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் முத்துக்குமரன் வாஹதாவுடன் பேசுவது போல சாட்டிங் இருக்கிறது. அதில் உன்னை கடித்து விடுவேன், ஒரு நாள் வசமா என் கிட்ட மாட்டுவ அப்ப தெரியும்... என்றெல்லாம் முத்துக்குமாரன் அனுப்பியதாக அந்த ஸ்கிரீன்ஷாட்டில் இருக்கிறது.

Bigg Boss Muthukumaran

வாட்ஸ்அப் சாட்டிங்

அதற்கு வாஹதா, "இப்போதுதான் அவருடைய உள்அர்த்தமே எனக்கு புரிகிறது" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த பலர் இது உண்மையா? அல்லது எடிட் வெர்ஷனா? என்று கேள்வி எழுப்புகின்றனர். சிலர் இதை வைத்து முத்துக்குமரனை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த பிரச்சனை வந்த பிறகு முத்துக்குமரன் எந்த வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை. இதனால் அவர் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் பலருக்கு சொல்லி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+