பிக் பாஸ் சீசன் 6: அம்மாவின் அன்பிற்காக போட்டியாளராக அறிமுகம் ஆகும் திருநங்கை சிவின் கணேசன்
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் புது முயற்சி ஆக பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ள நினைக்கிறோம் என்பதை விளக்கி வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்கள்.
இதில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிக் பாஸ் தேர்ந்தெடுப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் திருநங்கை சிவின் கணேசன் ஒருவராக இருக்கிறாராம்.

ஆறாவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி கிடைக்காததால் இந்த சீசனில் எப்படியும் ரசிகர்களை கவரும் விதமாக இருக்க வேண்டும் என்று பல புது விதமான யுக்திகளை கையாண்டு உள்ளனர். அதில் பிக் பாஸ் வீடு போட்டியாளர்கள், போட்டிகள் என பலவற்றும் அடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. வழக்கத்தை விட இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

புது முயற்சி
முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தாங்கள் எதனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறோம் என்பதை ஒரு வீடியோவாக பதிவிட்டு பிக் பாஸ் இருக்கு அனுப்ப பிக் பாஸ் ப்ரோமோவில் கமல் கூறி இருந்தார். அதுபடி ரசிகர்கள் பலர் வீடியோக்களை அனுப்பி இருக்கிறார்களாம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிக் பாஸ் தேர்வு செய்திருக்கிறதாம். திரை பிரபலங்கள் ஒரு சிலரும் எந்த வகையிலும் பிரபலம் இல்லாமல் இருக்கும் போது மக்கள் ஒரு சிலரும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

அறிமுகமாகும் புது நபர்
அதன்படி இதில் திருநங்கை ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறாராம். ஏற்கனவே கடந்த சீசனில் நமீதா மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார். அவருடைய சோக கதையை கேட்ட ரசிகர்கள் பலர் திருநங்கைகள் மீது இருந்த கருத்தை மாற்றிக் கொண்டனர். அது மட்டும் அல்லாமல் திருநங்கைகளின் வலிகளை பற்றி புரிந்து கொள்ளவும் செய்திருந்தார்களாம். அதனால் இந்த முறையும் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் சிவின் கணேசன் என்பவராம். வீட்டுக்கு ஒரே பையனாக இருப்பவராம். வீட்டில் இவரது உணர்வுக்கும், விருப்பத்திற்கும் ஆதரவு கிடைக்கவில்லையாம். எனவே வேலை தேடி இவர் சிங்கப்பூருக்கு சென்று விட்டாராம். ஆனால் அங்கே சென்ற பிறகு இவருக்கு அங்கே பிடிக்காததால் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்து விட்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்து விட்டாராம்.

ஏக்கம் பெருசு தான்
சிவில் கணேஷ் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பி வந்தது அவருடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம். எனவே அம்மாவை இதுவரை அவர் சந்திக்கவே இல்லையாம். ஹெச். சி. எல் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறார். இவரும் தற்போது பிக் பாஸ் போட்டியில் பங்குபெற்று இருக்கிறதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் போட்டியில் தான் பங்கேற்பதை பார்த்து இதுவரை பேசாத இவருடைய அம்மா தன்னிடம் பேசுவார் என்று நம்பி இருக்கிறாராம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications