பிக் பாஸ் தமிழ் 10! கிராண்ட் லான்ச் தேதி இதுதான்! விஜய் சேதுபதியுடன் களமிறங்கும் போட்டியாளர்கள் யார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 விரைவில் ஆரம்பமாகிறது. அதற்கான தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.. சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை வித்தியாசமான பின்னணியில் களமிறங்க இருப்பதால், இந்த சீசன் இதுவரை இல்லாத அளவுக்கு செம சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் இருக்கப் போகிறதாம்.

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாகவே சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியாகும்.. வருடா வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆதரவு அதிகரித்தபடியே உள்ளது. இப்போது 10வது சீசனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

Bigg Boss Tamil 10

பிக்பாஸ் சீசன் எப்போது

கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் எப்போது ஆரம்பிக்க போகிறார்கள்? என்ற ஆவலோடு ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்து கிடந்தனர். இப்போது இந்த எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்துவிட்டது.. பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்டமான கிராண்ட் லான்ச் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் கோலாகலமாக தொடங்கவிருக்கிறது.

10வது சீசன் என்பதால் சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக "மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இடம்பெறும் 'கார்னிவிழா' மற்றும் 'ஒட்டிக்கிச்சு' ஸ்பெஷல் இசை வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Bigg Boss Tamil 10

ஜியோஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் லைவ்

அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் ரசிகர்களுக்கு இன்னொரு முக்கியமான வசதியும் கிடைக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு பதிலாக, ஜியோஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையாக பார்க்க முடியும். இதனால் வீட்டுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை தவறவிடாமல் ரசிகர்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம்.

இந்த சீசனில் பிக்பாஸ் நேயர்களை குதூகலப்படுத்தவும், அதிரடி ட்விஸ்ட்களை உருவாக்கவும் நிகழ்ச்சி குழு பலே வியூகம் ஒன்றை அமைத்திருக்கிறது.. அதாவது வழக்கமான சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சோஷியல் மீடியா பிரபலங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு புதிய முகங்களை களமிறக்க படக்குழு தீவிரமாக யோசித்து வருகிறதாம். இதுதொடர்பாக உறுதிப்படுத்தப்படாத சில சுவாரஸ்யமான தகவல்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

போட்டியாளர்கள் யார் யார்

அதன்படி, கடந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அரோராவின் காதலர் எனப் பேசப்படும் பார்கவ், இளசுகளின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் "ஹார்ட் பீட்" வெப்சீரிஸின் முக்கிய நடிகர், மற்றும் தனது ஜாலியான வைரல் வீடியோக்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் போன்றோரின் பெயர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்காக அடிபட்டு வருகின்றன.

இதுமட்டுமின்றி, தி காமன்மேன்' நிகழ்ச்சி மூலமாக தேர்வு செய்யப்படும் ஒரு சாதாரண மனிதரும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழையவிருக்கிறார். சீசன் 10 தொடங்குவதற்கு முன்பாக போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு, பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்

ஒரே வீட்டுக்குள் பிரபலங்களும் பொதுமக்களும் இணைந்து வாழும்போது ஏற்படும் கருத்து மோதல்கள், நட்பு, போட்டி, உணர்ச்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10

எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இதுவரை இல்லாத அளவுக்கு செம சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அரங்கேறப்போகிறதாம்.

மொத்தத்தில், 10வது சீசன் என்பதால் பிக் பாஸ் தமிழ் இந்த முறை பல புதிய அம்சங்களுடன் களமிறங்குகிறது. விஜய் சேதுபதியின் தொகுப்பு, பிரபலங்களுடன் காமன்மேன் போட்டியாளர்கள், 24x7 நேரலை என எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அம்சங்களுடன் செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு பிக் பாஸ் தமிழ் 10-ன் கதவு திறக்கிறது.

இந்த நிகழ்ச்சியை ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+