Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் தமிழ் 5: இறுதிப்போட்டியில் கமலின் கலக்கலான உடை..இதற்குப் பின்னால் இவ்வளவு இருக்கா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் கிராண்ட் பினாலேவில் கமல் அணிந்திருந்த கலக்கலான உடை தான் சமூக வலைத்தளத்தில் பலருடைய வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புது கெட்டப்பில் வரும் கமல் தற்போது கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கண்களை கவரும் விதமாக பளிச்சென்ற லேடக்ஸ் உடையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வாத்தியார் என்றால் சும்மாவா? ?

வாத்தியார் என்றால் சும்மாவா? ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ பிரமாண்டம் என்றால் அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அதிகளவில் பிரம்மாண்டமாக உடை அலங்காரத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். போட்டியாளர்களே அப்படியென்றால் அதனைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் சும்மாவா வரவேண்டுமென்று சொல்லும்விதமாக தான் ஒவ்வொரு வாரமும் பஞ்சாயத்து பண்ண வரும் கமல்ஹாசன் கலக்கி வருகிறார் .

ரசிகர்களை கவர்ந்த உடை

ரசிகர்களை கவர்ந்த உடை

தானொரு வாத்தியாராக வருவதால் அனைவரும் தன்னையே பார்க்க வேண்டும் என்பதற்காக இவர் விதவிதமாக அலங்காரத்தில் மட்டுமில்லாமல் புது விதமான ஆடை அலங்காரத்திலும் கலக்கி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் கிராண்ட் பினாலே வில் கமல் அணியும் ஆடை பற்றி அறிந்து கொள்வதற்காக பலர் சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அந்த மாதிரி தான் தற்போதைய சீசனின் இறுதி நாளான இன்று இவர் அணிந்திருக்கும் வித்தியாசமான உடை பலருடைய கண்ணை பறித்து கருத்தையும் கவர்ந்துள்ளது.

அக்ஷராவின் கருத்து

அக்ஷராவின் கருத்து

கமல்ஹாசன் இறுதிப்போட்டிக்கு நீலநிற லேடக்ஸ் உடையை அணிந்த படி வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார். இவருடைய கருத்துக்கள் மட்டுமல்லாமல் உடைகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கருப்பு நிற கோட்டுடன் லேடக்ஸ் ஸ்லீவ்கள் மற்றும் பெல்டுடன் போட்டியாளர்கள் முன்பு கம்பீரமாக இவர் காட்சி அளித்து வருகிறார். இவர் இவ்வளவு பிரமாண்டமாக உடை அதைப்பார்த்த அக்ஷரா, சார்.. உங்கள் ட்ரஸ் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதற்கு சங்கோஜப்பட்ட படியே தன்னுடைய பொன் சிரிப்பை உதிர்த்து உங்கள் உடையும் அழகாக உள்ளது என்று அக்ஷராவிற்கு நன்றி கூறியுள்ளார்.

 படைப்பாளியின் திறமை

படைப்பாளியின் திறமை

கமலஹாசனின் உடைய அமிர்தா ராம் என்பவர் வடிவமைத்துள்ளார் .பேஷன் டிசைனில் ட்ரெண்டிங்கில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதை வெளி உலகத்திற்கு கொண்டு காட்டுவதற்காக ஒரு பிரபலத்தை பலரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பலருடைய ரோல்மாடலாகவும், ஸ்டைலிஸ் மன்னனாகவும் திகழ்ந்து வரும் கமலஹாசனுக்கு அமிர்தா ராம் தன்னுடைய கலைத்திறனை நிரூபித்து வருகிறார். அவருடைய திறமையை பலருக்கும் வெளிக்காட்டுவது கமல் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+