வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கமலை 'ஓட்டிய' சிவகார்த்திகேயன் இப்போ அவர் படத்தில்..சூப்பர்ல்ல
சென்னை:பிக் பாஸ் சீசன் 5 ன் இறுதிப்போட்டி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், தான் அடுத்ததாக கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் முதன்முதலாக படம் நடிக்க இருப்பதையும்,அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
இன்று கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பது சாதாரணமாக தெரிந்தாலும்... 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வந்த சமயத்தில் சிவகார்த்திகேயன்-கமல் ரசிகர்கள் இடையே நடந்த மோதல் குறித்தும் இன்று இருவரும் இனைந்து ஒரு படத்தில் பணிபுரிவது குறித்தும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

மோதல் வரை கொண்டு விட்டது
சாதாரண மிமிக்ரி கலைஞனாக இருந்து தன் கடின உழைப்பால் இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகனாக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், ஆரம்ப காலத்தில் தன் மேடை நிகழ்ச்சிகளில் பல நடிகரை போல் மிமிக்ரி செய்து கிண்டல் கேலி செய்து இருந்தாலும் அதை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.ஆனால் ஒரு திரை நட்சத்திரமாக உயர்ந்த பின்பு தன் படத்தில் பிற நடிகரை இமிடேட் செய்வதை அந்த நடிகரின் ரசிகர்கள் அவ்வளவு எளிதாகவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை சிவகார்த்திகேயன் அப்போது அறிந்திருக்கவில்லை. அப்படித்தான் கமலை தன் ரஜினி முருகன் படத்தில் ஒரே ஒரு டயலாக்கில் கிண்டல் பண்ண போக.. அது மோதல் வரை கொண்டு விட்டது..!!

விரக்தியில் கமல்
விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டின் போது பல திசைகளிலிருந்து பல பிரச்சினைகளை சந்தித்த கமல், விரக்தியின் உச்சத்தில் "இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று கூறினார். அவர் அப்படிக் கூறியது அந்த நேரத்தில் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் அனைவரையுமே அதிர்ச்சியும் வருத்தமும் அடைய செய்தது.

எளிதாக கமல் ரசிகர்கள் எடுத்துக்கொள்ளவில்லை
இப்படி உணர்வுபூர்வமாக பத்திரிக்கையாளர்களிடம் கமல் பேசிய வசனத்தை, சிவகார்த்திகேயன் தான் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சீனில் "தங்கள் ஊரில் ரெக்கார்ட் டான்ஸ் நடத்தவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று நக்கல் செய்வது போல் கூறியிருந்தார்.சிவகார்த்திகேயன் அந்த டயலாக்கை கமல் அவர்களை மனதில் வைத்து கூறினாரோ..!!?? அல்லது எதேச்சையாக கூறினாரா..!!?? என்று தெரியவில்லை.ஆனால் இதை அவ்வளவு எளிதாக கமல் ரசிகர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

கமல்- சிவகார்த்திகேயன் இணைந்த படம்
திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்க முயலும் அளவிற்கு சென்று விட்டது. ஆரம்பத்திலிருந்தே தன்னை ரஜினி ரசிகராக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கமல் ரசிகர்களுடன் இந்த அளவிற்கு பிரச்சனை நடந்து இருந்தும், கமல்- சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து படம் எடுப்பது குறித்து இருவரின் பெருந்தன்மையையும் ரசிகர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications