Bigg Boss: பிக் பாஸில் மிட்நைட் எவிக்ஷன்! கெஸ்ட் ஆக வந்த கவின் கொடுத்த அதிர்ச்சி! பார்வதிக்கு பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நவம்பர் 21ஆம் தேதிக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆக கவின் வந்திருக்கிறார். கவின் தான் நடித்த மாஸ்க் படத்தின் ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் இன்று மிட்நைட் எவிக்ஷன் நடக்கப் போவதாகவும் யார் வெளியேறப் போகிறார் என்று கார்டில் இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் தான் இருந்து வருகிறது. இவர்களின் சண்டைக்கு இல்லையா சார் என்ட் என்று ரசிகர்களே புலம்பும் அளவிற்கு உள்ளே எதற்கெடுத்தாலும் சண்டை. நான் தான் பெரியவன் என்பது போலவே எல்லோரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நான்கு பேர் அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த பிறகு விளையாட்டு அப்படியே மாறிவிடும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

வைல்ட் கார்டாக பிரஜன் மற்றும் அவருடைய மனைவி சான்ரா, நடிகர் அமித் பார்கவ் மற்றும் நடிகை திவ்யா கணேஷ் என நான்கு பேரும் வந்த பிறகு சண்டைக்கு மட்டும் குறைவில்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு வருகிறது. வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் வெளியே போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
பிரஜன் இதற்கு முன்பே சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டு பெரியது சுவாரசியம் ஏற்படுத்தவில்லை, கடுப்பை தான் வருகிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பிரமோஷன்காக கவின் வந்திருக்கிறார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கவின் கலந்து கொண்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி பற்றி பிக் பாஸ் பாராட்டி இருந்தார். அந்த சீசனில் சாண்டியின் விளையாட்டை அவர் பாராட்டி இருந்தாலும் அந்த சீசன் தான் இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமான சீசன், காமெடியான சீசன் என்று பலராலும் பாராட்டப்படுகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் அதிகமான நெகட்டிவ் பெற்றிருந்தாலும் அவர் பணத்தை தூக்கிக்கொண்டு வெளியே வந்தது பிறகு அவருக்கு அதிகமான அனுபவம் வந்திருந்தது இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது அவர் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். உள்ளே எல்லாரிடமும் ஜாலியாக விளையாடிவிட்டு போகும் போதும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஜாலியா போகணும்னு தான் நினைச்சேன் ஆனா பிக் பாஸ் எனக்கு ஒரு விஷயத்தை கொடுத்து அனுப்பி இருக்கிறார் என்று ஒரு கார்டை கொடுக்கிறார்.
அந்த கார்டை காட்டிவிட்டு இன்று மிட்நைட் எவிக்ஷன் இருக்கிறது அதற்கு தயாரா இருந்துக்கோங்க என்று அந்த கார்டை அங்கேயே வைத்துவிட்டு வெளியே வருகிறார். அதை இந்த வார தலைவராக இருக்கும் எஃப்ஜே ஓபன் செய்து பார்க்க கடைசியில் பிராங்க் (prank) என்றுதான் இருக்கிறது. முதலில் P என்ற வார்த்தையை பார்த்ததும் பார்வதி அதிர்ச்சியடைந்து என்ன இன்னைக்கு அனுப்பி விடுவார்களா? என்று புலம்பி கொண்டிருந்தார். கடைசியில் பிராங்க் என்றதும் உள்ளிருந்த எல்லோரும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications