இதையெல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா? அசீம் எப்படி 25 லட்சம் தருவீங்க? நெட்டிசன்கள் கலாய்ப்பு
அசீம் தான் ஜெயித்த 50 லட்சம் பணத்தில் 25 லட்சம் பணம் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கொடுப்பேன் என்று கூறியதை தொடர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னரான அசீம் தான் ஜெயித்த பணத்தில் பாதி 25 லட்ச பணத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி குழந்தைகளுக்கு செலவழிப்பேன் என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த சீசனில் டைட்டில் வின்னர் அசீம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் அதிகமானோர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் கொடுக்கும் 50 லட்சத்தில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் 35 லட்சம் தான் வரும் இதில் எப்படி 25 லட்சத்தை அசீம் கொடுப்பார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குறையாத கருத்து மோதல்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றிய பரபரப்பு குறைந்த பாடு இல்லை. காரணம் இந்த நிகழ்ச்சியின் கடைசியில் அசீமுடைய வெற்றியை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அசீமுடைய ரசிகர்கள் தாங்கள் ஓட்டு போட்டு தான் தங்களுக்கு பிடித்த அசீம் ஜெயித்தார் என்று அவர்கள் ஒரு பக்கம் விக்கிரமனை தாக்கியும் அசீமை கலாய்ப்பவர்களை தாக்கியும் சமூக வலைத்தளத்தில் பதில் வெளியிட்டு வருகிறார்கள்.

அசீம் கூறிய உறுதி
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரே ஒரு வீடியோவை மட்டும்தான் அசீம் வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஓட்டு அளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சொன்னபடியே தான் ஜெயித்த பணம் 50 லட்சத்தில் 25 லட்சத்தை ஓபன் அக்கவுண்ட் ஓபன் செய்து, அதில் கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி குழந்தைகளின் செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும் அதில் யாருக்கெல்லாம் உதவி செய்யப்படுகிறது அவர்களுடைய தகவல்கள் பெயர் மட்டும் மறைக்கப்பட்டு தெரிவிக்கப்படும் என்றும் அவர்களுக்கு தனியாக ஒரு சமூக வலைதள பக்கம் பயன்படுத்தி அதில் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

அது எப்படி முடியும்
இந்த நிலையில் அது எப்படி அசீம் ஆல் 25 லட்சம் கொடுக்க முடியும். அசீம் ஜெயித்தது 50 லட்சம் ரூபாய் என்றாலும், அதில் ஜிஎஸ்டி எல்லாம் கழித்து மீதம் இருப்பது குறைந்தது 35 லட்சம் தான் வரும். அதில் எப்படி 25 லட்சத்தை அசீம் கொடுத்து விட்டு போவார் என்று சிலர் கேள்வி எழுப்ப, இதுவெல்லாம் தெரியாமலா அசீம் அப்படி கூறுவார். அவருக்கு செய்ய வேண்டும் என்கிற மனது இருப்பதால்தான் அதை பொதுவெளியில் எவ்வளவு தைரியமாக கூறுகிறார். ஆனால் அதிலும் இப்படி செய்வதற்கு முன்பே சந்தேகங்களை எழுப்புகிறார்களே? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

பதில் சொல்வாரா அசீம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரன்னரான விக்ரமன் தொடர்ந்து பல சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அசீம் ஒரே ஒரு வீடியோவை மட்டும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு பிறகு எந்த சேனலிலும் பேட்டி கொடுக்கவில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். நெட்டிசன்கள் அதிகமாக அசீமைக் கலாய்த்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கெல்லாம் பதில் சொல்வாரா? அசீம் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications