போன வாரம் பரபரப்பை ஏற்படுத்தியவருக்கு இப்படி ஒரு நிலைமையா? இந்த வாரம் வெளியே கிளம்பும் போட்டியாளர்?
சென்னை: பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் நான்காவது வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் விபரம் கசிந்துள்ளது.
கடந்த வாரம் முழுக்க பிரச்சனைகளில் அடிபட்ட போட்டியாளர்களின் பெயர்கள் இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கும் போது பலரும் எதிர்பார்த்த போட்டியாளர் வெளியேறி இருக்கிறாராம்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விட வேண்டும் என்று ஆர்வத்தோடு வந்த போட்டியாளருக்கு இப்படி ஒரு நிலைமையா? எல்லாம் கடந்த வாரம் செய்த செயலின் வினை தான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கமல் சொல்லப்போகும் பெயர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நான்காவது வாரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது எலிமினேஷன் யார் என்பது பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏற்கனவே மூன்று பேர் எலிமினேஷன் ஆகி இருந்தாலும் அதில் ஜி பி முத்து தானாக விருப்பப்பட்டு வெளியேறி இருந்தார். அவர் போக இரண்டு போட்டியாளர்கள் தான் ரசிகர்கள் ஓட்டு போட்டு அனுப்பி வைத்திருக்கின்றனர். அது முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டரும் கடந்த வாரத்தில் அசல் கோலாரும் தான் .இந்த நிலையில் மூன்றாவது போட்டியாளராக பலரும் கடந்த வாரமே உச்சரித்து வந்த ஷெரினாவின் பெயர் தான் இந்த வாரம் கமல் கையில் இருக்கும் அட்டையில் பொறிக்கப்பட்டு கிடக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இப்போதான் அது கிடைத்திருக்கிறது
வீட்டிற்கு செல்ல பிள்ளையாக இருக்கும் ஷெரினா தான் நடிக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டதும் அவருடைய பெற்றோர் அதற்கு சம்மதித்து விட்டார்களாம் . செரினாவின் சொந்த ஊர் பெங்களூர் தானாம். தன்னுடைய திறமைக்கு சரியான இடம் அமையாவிட்டாலும் மாடலிங் விளம்பரம் போன்றவற்றின் மூலமாக ஒரு சிலருக்கு பரிச்சயமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர் ஒரு சில வருடங்களாகவே ட்ரை பண்ணிக் கொண்டிருந்தாராம். தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பொம்மை டாஸ்க்கால் வந்த வினை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ஷெரினாவை பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவாக பேன்ஸ் பேஜ்களை தொடங்கி மீம்ஸ்களில் இவரை பாராட்டி வந்தனர். இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமானோர் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த வாரம் பொம்மை டாஸ்க்கில் இவர் நடந்து கொண்ட விதம் பலரும் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வந்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விளையாடும் போது இவருக்கு தலையில் அடிபட்டதற்கு காரணம் தனலட்சுமி தான் என்று இவர் அசிம் கூறியதை கேட்டு அப்படியே கூறிவிட்டார். அதுபோல விளையாட்டிலும் இவர் நடந்து கொண்டது பலருக்கும் பிடிக்கவில்லை என்று அப்போது கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த வாரம் சிக்கியது இவர்தானாம்
இந்த நிலையில் இந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் எலிமினேஷனில் இருக்கின்றனர். அதில் அசீம், விக்ரமன், ஆயிஷா ,ஷெரினா மற்றும் கதிரவன் இவர்களில் கடைசி இடத்தில் ஷெரினா தான் இருக்கிறார். அதனால் இவர்தான் இந்த நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேற இருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதற்கு முன்பு எல்லாம் கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலே இருக்கும்.ஆனால் ஷெரினாவிற்கு அதிக அளவில் குறைவான வாக்குகள் கிடைத்து இருப்பதால் இவர்தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என்று பலரும் அடித்துக் கூறி வருகிறார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications