நீங்க கத்துன வரைக்குமே போதும்.. இந்த வார வெளியேறும் போட்டியாளர்.. இணையத்தில் வெளியான தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியே போகிறார் என்று இப்போது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வார எலிமினேஷனில் ஏழு போட்டியாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.
இதில் தற்போது யார் வெளியே போகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக நடைபெறுவது தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். இதில் சில நேரங்களில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தற்போதைய ஆறாவது சீசனில் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு சில எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய ஐந்தாவது வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். பிக் பாஸ் ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகமாகினர், இதில் நான்கு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.

எலிமினேஷனில் ஏழு போட்டியாளர்கள்
ஜி பி முத்து தானாகவே விருப்பப்பட்டு வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து முதல் போட்டியாளராக சாந்தி மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து அசல் வெளியேறினார். அடுத்ததாக கடந்த வாரம் ஷெரினா வெளியேறினார். இந்த நிலையில் இந்த வாரம் யார் என்று ரசிகர்கள் இப்போது கூற தொடங்கிவிட்டனர் .அந்த வகையில் அதிகமாக இடம்பிடித்து வருபவர் மகேஸ்வரி தான். இந்த வாரத்தில் ஆயிஷா, அசீம், ஏ டி கே, ராம், மகேஸ்வரி, தனலட்சுமி ,விக்ரமன் என ஏழு போட்டியாளர்கள் எலிமினேஷனில் இடம் பிடித்திருக்கின்றனர். அவர்களில் தற்போது வரை வாக்குகளின் எண்ணிக்கையில் குறைவான இடத்தில் இருப்பது மகேஸ்வரி தான்.

ஒருவேளை இருக்குமோ
மகேஸ்வரி முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டரோடு ஏற்பட்ட சண்டையின் காரணமாக ரசிகர்களின் மத்தியில் இவருக்கு சில நெகட்டிவ் கருத்துக்கள் ஏற்பட தொடங்கியது. அதற்கு பிறகு தொடர்ச்சியாக இவர் அசீம் ,விக்ரமன் என ஒரு சிலரிடம் அடிக்கடி சண்டை இட்டுக் கொண்டே இருக்கிறார். வார நாட்களில் இவர் அமைதியின் சிகரமாக மாறி விடுகிறார் என்று பலர் இவர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஏற்கனவே இதே வேலையை பல போட்டியாளர்கள் செய்து கொண்டு இருந்தாலும் மகேஸ்வரிக்கு சமூக வலைத்தளத்தில் தற்போது பல நெகடிவ் கருத்துக்கள் ஏற்பட தொடங்கி இருக்கிறது.

எதிர்பாராததை எதிர்பார்ப்போம்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக் பாஸின் தாரக மந்திரம் .அதுபடி தான் ஆரம்ப நாட்களில் அசீம் ரசிகர்களிடம் நெகட்டிவ் கருத்துக்களை கொண்டிருந்தார் .ஆனால் போகப் போக இப்போது அவருக்கு அதிகமான ரசிகர்கள் வரத் தொடங்கி இருக்கின்றனர். தற்போது வரை ஓட்டுக்களின் அடிப்படையில் அசீம் தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து விக்ரமன் இருந்து வருகிறார். கடைசி இடங்களில் மகேஸ்வரியும் அவரை தொடர்ந்து ஏடிகே இருந்து வருகின்றனர் .இதனால் இந்த வாரம் மகேஸ்வரி வெளியே செல்வதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது .ஆனால் இன்னும் ஒரு சில நாட்கள் இருப்பதால் இவருடைய பெர்பார்மன்ஸ் காரணமாக இவருக்கு ஓட்டுகள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பிருக்கிறது. இதனால் பொறுத்து இருந்து பார்த்தால் தெரியும் கடைசியில் கத்தி கத்தி பேசுகிறவர்கள் வீட்டுக்குள்ளே இருக்கப் போகிறாரா? அல்லது வெளியே செல்ல போகிறாரா? என்று. ஏற்கனவே மகேஸ்வரி முதல் வாரத்தில் கடைசி ஆக சேவ் ஆனதால் அவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். ஆனால் இந்த வாரம் வெளியேறும் போது என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ? என்று எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் கூடி இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications