ஓசியில் கிடைக்கும் அட்வைஸை வைத்து இந்த வார கன்டென்ட் ரெடி பண்ணிட்டாங்களே..!? இது என்ன புது டாஸ்க்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
ஸ்கிராட்ச் கார்ட்டில் ஸ்கிராட்ச் செய்து அதில் ஜெயிக்கும் போட்டியாளர் சக போட்டியாளர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் டாஸ்கால் இந்த வாரம் கண்டெண்டுக்கு பிக் பாஸ் புது வகையில் யோசித்து இருக்கின்றனர்.

கமல் செய்த கண்டிப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க்கு பிறகு பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் வரவில்லை என்பதை புரிந்து கொண்ட பிக் பாஸ் இன்று புதுவிதமாக விளையாட்டை தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோடில் கமல் போட்டியாளர்கள் அனைவருக்கும் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் எளிமையில் யாரும் கலந்து கொள்ளவில்லை .அது மட்டும் அல்லாமல் இங்கே யாரும் ஓசியில் சேவை செய்ய வரவில்லை. அனைவரும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் இங்கே விளையாட வந்திருக்கிறீர்கள் இங்கே ஏனோ தானோ வேணா இருக்கக் கூடாது என்று போட்டியாளர்களுக்கு செம அட்வைஸ் கொடுத்திருந்தார். அது இன்று பிரதிபலிக்க தொடங்கி இருக்கிறது.

தொடங்கியது புது டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் நடந்தால் தான் அதைப்பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசி வருவார்கள் .அந்த வகையில் இன்று அதற்கு வழி செய்யும் வகையில் கார்டன் ஏரியாவில் பிரச்சனை தொடங்கி இரக்கிறது .இது ஸ்கிராச்ட் கார்டுக்கான நேரம் மினி ஹவுஸ் என்று கதிரவன் இன்றைய டாஸ்கை படித்துக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து மைனா நிந்தினியை கார்டன் ஏரியாவில் இருக்கும 10 முதல் ஒன்று வரை அடுக்கப்பட்ட பலகையில், பந்து ஒன்றை பத்தாம் நம்பரில் இருந்து தட்டி தட்டி ஒன்றில் இருக்கும் சின்ன ஓட்டையில் விழ செய்ய வேண்டும் அந்த டாஸ்கை விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த டாஸ்க்கில் தனலட்சுமி ஜெயித்திருக்கிறார்.

இலவச அட்வைஸ் பிரச்சனை
அவர் அங்கு இருக்கும் கார்டை எடுத்து ஸ்க்ராட்ச் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரீ அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் அவருக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் முதலில் விக்ரமனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். ஒருத்தங்க பேசுறாங்கன்னா அது அவங்களோட கேரக்டருக்கு பேசுறாங்க அதை புரிஞ்சுகிட்டு நீங்க இருக்கணும் என்று அட்வைஸ் கொடுக்கிறார். அவரைத் தொடர்ந்து ராமுக்கு அட்வைஸ் கொடுக்கிறார், என்னை வேலை செய்ய வில்லை என சொல்றாங்க, ஜெயிலில் வைக்கிறாங்க என்று சொல்லாதீங்க என்றும் அவரைத் தொடர்ந்து ஷிவினுக்கும் அட்வைஸ் கொடுக்கிறார்.

யார் அடிச்சிக்க போறாங்க
அசீமுக்கு நாம பேசணும் என்று நீங்க பேசாம இரண்டு பக்கமும் இருக்கிற நியாயத்தை கேட்டுட்டு நீங்க பேசணும் என்று நான் நினைக்கிறேன் என்று தனலட்சுமி கூறிக் கொண்டிருக்கிறார். தனலட்சுமி வாயாலே இந்த வாரம் பிரச்சனைக்கு ஆரம்பத்தை ஏற்படுத்தி இருக்கும் பிக்பாஸின் புது பிளான் அடுத்த ப்ரோமோவில் யார் அடிச்சுக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எதிர்பார்த்து இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications