இது எனக்கு அசிங்கம் வெளியேறிய ஏடிகே... எதிர்பாராத நிகழ்வுகளால், மாறிப்போன பிக்பாஸ் எலிமினேஷன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏடிகே மற்றும் அசீம் சண்டையால் ஏடிகே டாஸ்கிலிருந்து வெளியேறி விட்டார்.
ராயல் மியூசியம் டாஸ்க்கில் அசீம் தொடர்ந்து ஏடிகேவை டார்கெட் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டுகளை வைத்திருக்கிறார்.
படைத் தளபதியாக இருக்கும் அசீம் காவலாளியாக இருக்கும் ஏடிகேயிடம் நடந்து கொண்டது சரியில்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மீண்டும் பழைய நிலைக்கு வந்த அசீம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டுக்காக ராயல் மியூசியம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ராணியாக ரட்சிதாவும் ,ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், இளவரசியாக ஜனனியும், இளவரசராக மணிகண்டனும், படைத்தளபதியாக அசீம் மற்றும் ஞான குருவாக விக்ரமன் மற்றும் பலர் பணியாளர்களாக இருந்து வருகின்றனர் .இதில் அசீம் படைத்தளபதியாக இருந்து தனது ராஜ்யத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இரண்டு வாரங்களாக அமைதியாக இருந்த அசீம் நேற்றிலிருந்து தன்னுடைய பழைய ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.

ரகசியமான டாஸ்க்
அசீமுக்கு பிக் பாஸ் தனியாக அழைத்து டாஸ்க் கொடுத்திருக்கிறது அரசவையில் இருக்கும் கஜானாவில் ஆபரணங்கள் குறைந்து விட்டதால் மியூசியத்தில் இருக்கும் பொருட்களை ஒரு வேலையாளுடன் சேர்ந்து திருட வேண்டும் என்று டாஸ்க் கொடுத்து இருக்கிறது. இதற்கு அசீம் கதிரவனை பயன்படுத்தி இருக்கிறார் .இந்த நிலையில் மியூசியத்தின் காப்பாளராக தலைவர் பொறுப்பில் இருக்கும் ஏடிகே இவர்களுடைய பிளானை தெரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து பொருட்களை காப்பாற்றுவதற்காக இரவு முழுக்க முழித்துக் கொண்டிருக்கிறார்.

பெட்டியை தூக்கிய கதிர்
என்னதான் ஏடிகே இரவு முழுக்க கண்விழித்து இருந்தாலும், நேற்று விடிய காலையில் ஆபரண பெட்டியை கதிரவன் தூக்கி விட்டார். இதற்காக நேற்று கதிரவனுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. அதுபோல மியூசியத்தில் இருந்த நகைகளை ஷிவின் எடுத்து அரிசி டப்பாவுக்குள் ஒளித்து வைத்திருந்தார் .அதையும் கடைசியில் கண்டுபிடித்து விட்டனர். இந்த நிலையில் இன்றைய பொருள்களை திருடியவருக்கு காலில் பூட்டு போட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை குறித்து அசீம் ஏடிகேயிடம் சண்டையை தொடங்கி இருக்கிறார்.

கடைசி நேர சண்டையும் மாற்றமும்
மனிதாபிமானம் இல்லாமல் ஒருவருடைய காலில் பூட்டு போடுவது தவறல்லவா என அசீம் கேட்க ,என்ன மனிதாபிமானம்? என்னுடைய வேலையை மட்டும் தான் நான் பார்க்கிறேன் என ஏடிகே பேச, வேலையை பார்த்தால் ஏன் தப்பி ஓடுகிறான் என அசீம் கேட்க, நீங்க கிழித்தவரைக்குமே போதும் தளபதியாரே என ஏடிகே கூற, ஒரு சாவியை பாதுகாக்க தெரியல, என ஏடிகே வை பார்த்து நக்கல் செய்ய, இந்த விளையாட்டை விளையாட வரல என ஏடிகே அப்படியே மேலே போட்டிருக்கும் கோட்டை கழட்டி வீசுகிறார். உன்னை போல் ஒருவனுடன் நான் கதைப்பதே அசிங்கம் என ஏடிககே பேச, எதற்காக கத்தி பேசுகிறார் என அசீம் கேட்க, போடா என ஏடிகே கிளம்புகிறார் .இந்த ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .அதுபோல இந்த வார எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் ,கடைசி இடத்தில் இதுவரைக்கும் ராபர்ட் மாஸ்டர் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது நிவா இருக்கிறார். இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து ,கடைசி நேரத்தில் நிவாவுக்கு ஓட்டுகள் குறைந்து இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications