இதை எதிர்பார்க்கவே இல்லை.. பிக் பாஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்! கண்கலங்கி கதறி அழும் போட்டியாளர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இதுவரைக்கும் அடித்து பிடித்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள் இன்று டாஸ்கில் கண்கலங்கி கதறி அழுகின்றனர்.
போட்டியாளர்கள் பல வாரங்களாக எதிர்பார்த்து இருந்த குடும்பத்தினரின் வருகையால் பிக் பாஸ் வீடு இன்று குதூகலமாக மாறி இருக்கிறது.

பிரீஸ் டாஸ்க் தொடக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த ஆறாவது சீசனில் டிஆர்பி யின் அளவு குறைவாக இருக்கிறது என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியும் 79 நாட்களில் தொட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பிக் பாஸ் அனைவரையும் ப்ரீசாக நிற்க வைத்து ரஞ்சி, பாப்பா, அமுதா, புச்சி, பப்லு ரிலீஸ் என்று சொன்னதும் கதிரவன் அய்யய்யோ அம்மா என்று என்ஜாய் செய்ய, மைனா யோகி என்று சந்தோஷம் அடைய மைனாவின் குழந்தை ஷிவினை பார்ப்பதற்காக அவருடைய குடும்பத்தினர் வருகின்றனர்.

தனலட்சுமிக்காக பீல் பண்ணும் ரசிகர்கள்
அமுதவாணனை பார்ப்பதற்காக அவருடைய குடும்பத்தினரும் வருகின்றனர். விக்ரமன் சந்தோஷத்தில் ஓடி வருகிறார். பிக் பாஸ் இதை எதிர்பார்க்கலைலா? என கேட்கவும் சத்தியமா இதை எதிர்பார்க்கலை என போட்டியாளர்கள் கண்கலங்கியபடி ஆனந்த கண்ணீரில் பேசுகின்றனர். இந்த பிரமோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பமானதில் இருந்தே போட்டியாளர்கள் பலரும் இந்த ஃப்ரீஸ் டாஸ்க் தங்களுடைய குடும்பத்தை கொண்டு வந்து விட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்தனர். அதிலும் குறிப்பாக தனலட்சுமி தினமும் இதைத்தான் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது டாஸ்க் தொடங்கி இருக்கிறது. தனலட்சுமி வெளியேற்றப்பட்டு விட்டாரே என அவருடைய ரசிகர்கள் பலர் இந்த பிரமோவிற்கு தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அசீமை காணவில்லையே
இந்த நிலையில் இந்த பிரமோவில் இன்று அசீமை காணவில்லை ஆரம்பத்தில் இருந்தே அசீம் தன்னுடைய குடும்பத்தினர் வருகையில் மகனின் வருகை தான் அதிகமாக எதிர்பார்த்தார். ஆனால் தற்போது அவருடைய குடும்பத்தில் இருந்து யார் வந்திருக்கிறார்கள் என்பதை ப்ரோமோவில் காட்டவில்லை என்பதால் ரசிகர்கள் அதைப் பற்றி அதிகமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவருடைய குடும்பத்தில் இருந்து யார்தான் வருவார்கள். அம்மா வருவாரா? அல்லது மகன் வருவாரா? என்று பலரும் எதிர்பார்ப்போடு கேள்விகளை எழுப்புகின்றனர். அதனால்தான் தற்போதைய முதல் ப்ரோமோவில் அசீமின் முகத்தை காட்டவில்லையோ என்னவோ.

பாகுபாடு இருக்கிறதா
அதுமட்டுமில்லாமல் விக்ரமன் குடும்பத்தில் இருந்தும் யார் வந்தார்கள் என்பதை காட்டவில்லை. விக்ரமின் குடும்பத்தில் அவருடைய அம்மா அப்பா வருவார்களா? அல்லது கட்சியில் இருந்தவர்கள் நண்பர்கள் வருவார்களா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் இது எதிர்பார்க்காத ஃப்ரிஸ் டாஸ்க் தான் கடந்த வாரத்திலேயே இது நடைபெறும் என எதிர்பார்த்தோம் ஆனால் அப்போது நடைபெறவில்லை. இப்போது தனலட்சுமி வெளியேற்றிய பிறகு நடக்கிறது. இது விஜய் டிவி பிரபலங்களுக்காக பாகுபாடு காட்டப்பட்டு நடைபெறுவதாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி வருகிறார்கள். கடந்த வாரத்தில் டிஆர்பி அளவு குறைந்த நிலையில் இந்த வாரத்தில் இந்த டாஸ்க் மூலமாக டிஆர்பி அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications