ரச்சிதாவிற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நபர்.. கணவரின் கிப்ட்.. கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடந்து வரும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் ரச்சிதாவின் குடும்பத்தினர் இன்றைய முதல் ப்ரோமோவில் வந்திருக்கின்றனர்.
ரச்சிதாவின் ஃபேவரைட் மில்கி பூனைக்குட்டியின் புகைப்படத்தையும் கையோடு அவருடைய அம்மா கொண்டு வந்திருக்கின்றனர்.
ரச்சிதாவின் கணவர் ஏற்கனவே வெளியிட்ட புகைப்படத்தை ரச்சிதாவின் அம்மா அவருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.

ஃப்ரீஸ் டாஸ்க்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று 80 ஆவது நாள் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்றிலிருந்து ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர தொடங்கி இருக்கின்றனர். தற்போது 12 வது வாரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த நெகிழ்ச்சியான தருணங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

அம்மாவின் வருகை
மைனா நந்தினி, ஷுவின் மற்றும் அமுதவாணனின் குடும்பத்தினர் வந்து அட்ராசிட்டி செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று யார் வர இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொடங்கி இருக்கும் நேரத்தில் இன்றைய முதல் ப்ரோமோவில் ரச்சிதா ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த அவருடைய அம்மா வந்திருக்கிறார். இதுவரைக்கும் எந்த இடங்களிலும் ரச்சிதாவின் அம்மாவை அவர் வெளியே காட்டாமல் இருந்த நிலையில் முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

நெகிழ்ச்சியான தருணம்
இன்று ஃபிரீஸ் டாஸ்கில் அனைவரையும் நிறுத்த வைத்த பிக் பாஸ் அம்மா சாங் ஒலிக்க வைத்ததும் ரச்சிதா அவருடைய அம்மாவின் வருகையை புரிந்து கொண்டு அழுதப்படியே அம்மாவை வரவேற்க, குழந்தை போல அவருடைய அம்மாவின் மடியில் படுத்து அழுவதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல உள்ளே வந்ததும் அவருடைய அம்மாவின் கையில் இருந்த பூனைக்குட்டியின் புகைப்படத்தை வாங்கி மில்கி எப்படி இருக்கிறது என்று ஆசையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

கணவர் வரவில்லையே
இதே பூனைக்குட்டியின் புகைப்படத்தை தான் நேற்று ரச்சிதாவின் கணவரான தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரில் போஸ்ட் வைத்திருந்தார். இந்த நிலையில் அதே புகைப்படம் ரச்சிதாவின் கையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் தினேஷை பற்றி அவருடைய அம்மா ரச்சிதாவிடம் பேசுவாரா? என்று ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் கடந்த சீசனில் பிரியங்காவின் குடும்பத்தினர் வந்தது போன்று இந்த சீசனில் ரச்சிதாவின் குடும்பத்தினர் வருகை அமைந்திருக்கிறது என்று கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இது ரொம்ப எமோஷனலான ப்ரோமோ என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சில தீவிரமான ரசிகர்கள் அப்போ ரச்சிதாவின் ஹஸ்பெண்ட் வரவில்லையா என்று ஃபீல் பண்ணியும் கொண்டிருக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications