கதிர்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நபர்.. மொத்த குடும்பத்தையும் கையில்... இதுதான் ஆனந்த கண்ணீரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடந்து வரும் ஃப்ரீஸ் இன்று முதல் ப்ரோமோவில் கதிரின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர்.
கதிரை பார்ப்பதற்காக அவருடைய அம்மா அப்பாவோடு இன்னொரு பெண்ணும் வந்திருக்கிறார்.
கதிரை பார்க்க வந்திருக்கும் பெண்ணை பார்த்து கதிர் கண் கலங்கி அழுததை வைத்து தற்போது சமூக வலைத்தளத்தில் பல ட்ரோல்ஸ் வலம் வருகிறது.

குடும்பத்தினரின் வருகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 81வது நாளில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் இன்றைய முதல் பிரமோவில் கதிரின் குடும்பத்தினர் ஃப்ரீஸ் டாஸ்க் உள்ளே வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஃப்ரீஸ் இதுவரைக்கும் ஆறு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். இன்னும் கதிர், விக்ரமன், அசீம் மற்றும் மூன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் மட்டுமே வரவேண்டிய நிலையில் இன்று முதல் குடும்பத்தினராக கதிரின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர்.

இன்ப அதிர்ச்சி
ஃப்ரீஸ் டாஸ்கில் எப்போதும் அனைவரையும் ஃப்ரீஸாக இருக்க வைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரை உள்ளே அனுப்பி வைத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பர். ஆனால் தற்போது கதிருக்கு வித்தியாசமாக பிக் பாஸ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. எப்போதும் போல ஸ்டோர் ரூமில் இருந்து பெல் அடித்ததும் பேட்டரி ஆகத்தான் இருக்கும் என்று கதவை திறந்து உள்ளே பார்த்த அவருக்கு உள்ளே இருக்கும் நபரால் இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. உள்ளே இருக்கும் பெண்ணை பார்த்ததும் அவரைக் கட்டி அணைத்து கண்கலங்கிய கதிரை பார்த்து அந்தப் பெண் யாராக இருக்கும் என்று இன்றைய ப்ரோமோவிற்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

எதிர்பார்க்காத வருகை
அது மட்டும் அல்லாமல் கதிர் இதுவரைக்கும் அம்மா சென்டிமென்ட் பாட்டு வரும் போதெல்லாம் என்னுடைய அம்மாவாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அவருடைய குடும்பத்தினர் வரும்போது கொடுத்த போக்கஸ் விடவும் புதியதாக வந்திருக்கும் பெண்ணுக்கு கிடைத்திருக்கும் போக்கஸ் பார்த்ததும் இது கதிருடைய காதலியாக தான் இருக்கும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண் இதுதான் என்னுடைய ஃபேமிலி என்று கதிரின் கையில் தன்னுடைய ஹாட்டை கொடுக்க கதிர் கண்கலங்கி அழுகிறார் என்று கதிருக்கு ஆறுதல் கூறி நான் வெளியேயே சொன்னேன் அவர் என்னை எக்ஸ்பெட்டவே பண்ண மாட்டார் என்று கூறிக்கொண்டு கதிருக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அது யாராக இருக்கும்
கதிரோடு, கதிருடைய அம்மா மற்றும் புதிதாக வந்திருக்கும் பெண் மூவரும் சேர்ந்து பரதநாட்டியம் ஆட அந்தப் பிரமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இதுவரைக்கும் சிங்கிள்ஸ் என்று சுற்றிக் கொண்டிருந்த கதிர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அவர்தான் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார் என்றும் இது கதிரின் காதலியா? என்றும் இந்த பெண்ணை பார்த்தால் ஷிவினின் நிலைமை என்ன ஆகும்? என்றும் சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஷிவினை வெறுப்பேற்றுவதற்காக கதிர் இவ்வளவு நாளா குயின்சியோடு சுற்றிக் கொண்டிருந்தாரே அப்போ கூட தான் காதலிக்கும் பெண்ணைப் பற்றி கூறவில்லையே என்றும் கேள்வி எழும்பி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications