தொடங்கியது டிக்கெட் டூ ஃபினாலே.. வெற்றி பெறுபவர் இவரா? கடைசியில் எதிர்பார்க்காத வெளியேற்றம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 86வது நாளில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதுவரைக்கும் நடைபெற்ற போட்டிகளை விட இந்த வாரம் போட்டிகள் கடுமையான முறையில் நடைபெற இருக்கிறது.
இந்த டாஸ்க் ஜெயிப்பவர்கள் நேரடியாக கடைசி வாரத்தில் பங்கேற்று கொள்ளலாம் அவர்களை அதுவரைக்கும் யாராலும் நாமினேஷன் செய்ய முடியாது.

நாமினேஷனில் தப்பிய அசீம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் எப்படி இருக்கும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர் இன்று அந்த டாஸ்க் முதல் ப்ரோமோவில் தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோட்டில் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து அசீம் மட்டும் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அசீம் தன்னுடைய திறமையால் பிக் பாஸின் அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொல்லி இந்த வாரம் ஃப்ரீ நாமினேஷன் டிக்கெட்டை பெற்றிருக்கிறார். அவர் போக மீதம் இருக்கும் 7 போட்டியாளர்களும் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் இருக்கின்றனர்.

முதல் பிரமோ
இந்த நிலையில் இந்த வரம் டிக்கெட் டூ ஃபினாலே நடைபெற தொடங்கி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் வெறிகொண்டு வேங்கையாக விளையாட்டை விளையாட ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த வாரம் முழுக்க இதற்கான போட்டிகள் நடைபெற இருக்கிறது. வார இறுதியில் எந்த நபர் அதிக டயல்களால் தடம் பதித்திருக்கிறாரோ அவருக்கு டிக்கெட் டூ ஃபினாலே வழங்கப்பட்டு நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பப்படுவார். இந்த பிரமோ வெளியானது. ரசிகர்கள் பலர் ஏற்கனவே அசீம் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறார். ரசிகர்கள் அவரை பாதுகாத்து விடுவார்கள் என்ற நிலையில் அவர்தான் டிக்கெட் டு ஃபினாலே ஜெயிப்பார் என்று கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த வாரம் வெளியேறுபவர் யார்
இந்த வாரத்தில் விக்ரமன், கதிரவன், ஷிவின், ரச்சிதா, மைனா நந்தினி, ஏடிகே, அமுதவாணன் என ஏழு போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கும் நிலையில் இந்த வாரம் மைனா அல்லது ரச்சிதா அல்லது கதிரவன் இவர்கள் மூவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று இப்போதே ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு பக்கம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் எந்த ஒரு கண்டன்ட் கொடுக்கவில்லை அதனால் அவர்தான் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கருத்து கூறிவரும் நிலையில், ரச்சிதாவின் சின்னத்திரை ரசிகர்கள் பலரும் ரச்சிதா அவருடைய நிஜமான கேரக்டரில் இருக்கிறார். ஆனால் உள்ளே இருக்கும் பலர் போட்டியாளர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர்களைத்தான் வெளியேற்ற வேண்டும் என்று காரசாரமான விவாதங்களை வைத்து வருகின்றனர்.

வாய்ப்பு இருக்கிறது
அதுமட்டுமல்லாமல் அதிகமான ரசிகர்கள் ஷிவின் இந்த டாஸ்க் ஜெய்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்னதான் ஷிவின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர் இதுவரைக்கும் ஒரு முறை கூட தலைவர் பதவியில் ஜெயிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஒரு டாஸ்கை அவர் ஜெயித்துவிட்டால் நேரடியாக கடைசி வாரத்திற்குள் செல்லும் நிலையில் இவர் முதல் மூன்று இடத்திற்குள் கண்டிப்பாக இருப்பார் என்று ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர். ஏற்கனவே விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும வருவார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கும் நிலையில் இந்த டிக்கெட்டை யார் ஜெயிக்க போகிறார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications