Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் போட்டியாளர்களால் திடீரென வெளியேற்றப்பட்ட அசீம்.. நம்பிக்கையால் கடைசியில் கிடைத்த ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 88 வது நாளில் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.

சைக்கிள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட அசீம், ரச்சிதா மற்றும் ஷிவின் இடம் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு பெற இருக்கும் நிலையில் தற்போது இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்காக போட்டிகள் கடினமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் ஒவ்வொரு வாரமும் வீக் எண்ட் டாஸ்க் நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரம் முழுக்க வார்த்தை மோதல், விவாதம், பிசிகல் டாஸ்க் என பலவிதமான போட்டிகள் நடைபெறுகிறது. அதில் ஒவ்வொன்றிலும் வெற்றி பெறும் போட்டிகளில் டைல்ஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அதனை வைத்து அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று விடலாம். இதுவரைக்கும் நடைபெற்ற டாஸ்க்களில் அதிகமாக வெற்றி பெற்று மைனா நந்தினி முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் அமுதவாணனும் இருக்கின்றனர்.

 கடினமான டாஸ்குகள்

கடினமான டாஸ்குகள்

டாஸ்குகள் கடுமையாக மாறியதும் போட்டியாளர்கள் பலர் திணறிக்கொண்டு இந்த மாதிரி டாஸ்குகள் கொடுத்தால் கஷ்டமாக இருக்கிறது. அதனால் எளிமையாக டாஸ்க் கொடுக்கும் படி கெஞ்சி கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஷிவின், அசீம், அமுதவாணன், விக்ரமன் என அனைவருமே அந்த டாஸ்க் கொடுக்கலாம் அல்லது இந்த டாஸ்க் கொடுக்கலாம் என்று பிக் பாஸுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள். ஆனால் பிக் பாஸ் இவர்களுடைய பேச்சை கேட்காமல் இவர்கள் கேட்பதற்கு எதிராக கடினமாகவே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பேச்சி காத்தோட போச்சு

அந்தப் பேச்சி காத்தோட போச்சு

நேற்றைய எபிசோட்டில் விக்ரமன் இப்படி கடினமான டாஸ்க்கள் கொடுத்து கொண்டு இருந்தால் போர் அடிக்கும் அதனால் ஒரு குயிஸ் போட்டி வைக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க அப்போது அதுவெல்லாம் கிடையாது அப்படி வைத்தால் நீங்கள் ஜெயித்து விடலாம் என்று பார்க்கிறீர்களா? இப்படி பிசிகல் டாஸ்க் வைத்தால்தான் இந்நிகழ்ச்சிக்கு சுவாரசியமும் விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்று ஷிவின் கூறினார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து தாக்குப் பிடிக்க முடியாமல் ஷிவினே பிக் பாஸிடம் பிக்பாஸ் இப்படி கடினமாகவே இருந்து வந்தால் ரொம்பவே போர் அடிக்கிறது கொஞ்சம் என்டர்டைன்மென்ட் கொடுக்குற மாதிரி டாஸ்க் வைக்கலாம் என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறார்.

வெளியேற்றப்பட்ட அசீம்

வெளியேற்றப்பட்ட அசீம்

இந்த நிலையில் கடைசியாக சைக்கிளிங் போட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சைக்கிளில் இருந்து கொண்டிருந்த அசீம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதற்கு காரணம் ஷிவின் மற்றும் ரச்சிதா என்று அசீம் கோபத்தில் நேற்று கத்திக் கொண்டிருந்தார். நீங்கள் சொன்னதால்தான் நான் மாறி உட்கார்ந்தேன் ஆனால் என்னை மட்டும் பிக் பாஸ் வெளியேற்றி விட்டார். உங்கள் இருவரையும் நான் வச்சி செய்யப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார்.

விடாத வாக்குவாதம்

விடாத வாக்குவாதம்

இன்று அதன் தொடர்ச்சியாக நான் தானே இப்போ வெளியே நிற்கிறேன், உங்கள நம்பி இருக்கவே கூடாது நான் பாட்டுக்கு கம்முனு இருந்திருக்கணும் என்று அசீன் கூறிக் கொண்டிருக்க, ஷிவின் நடந்த இன்சிடெண்ட் எல்லாம் வச்சு நீங்க நான் உங்களை பிளான் பண்ணுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா? என்று கேட்க, அதற்கு அசீம் உங்களுக்கும் ரச்சிதாவுக்கும் ஓகே தானா என்று கேட்க? அதற்கு ஷிவின் நீங்க இப்படி எடுத்துக்கிறீங்கன்னா எடுத்துக்கோங்க என்று கூறுகிறார். அதற்கு எடுத்துக்கிறது இல்ல ஷிவின் இது எனக்கு ரொம்ப பிடிச்ச கேம், நான் இதை விளையாட முடியாம போனதுக்கு ரொம்ப பீல் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று அசீம் கூற, நீங்க தான் என்னையும் ரச்சிதாவையும் வச்சி செய்வேன்னு சொல்லிட்டு போறீங்களே என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அசீம் அது நிச்சயமா நெஸ்ட் கேமில் வந்துச்சுன்னா நான் செய்வேன் ஷிவின் என்று நான் இப்பவும் சொல்கிறேன் என கூறிக்கொண்டு செல்கிறார். இதே பார்த்து ரச்சிதா முறைத்தபடி இருக்க இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த ப்ரோமோவை பார்க்கும் போதே தெரிகிறது இன்று ஒரு பஞ்சாயத்து இருக்கிறது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+