அமுதவாணனால் மாறிப்போன ஆட்டம்.. கமல் கொடுத்த ஃக்ளூ... இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 90 வது நாளுக்கான இன்றைய முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

சனிக்கிழமை எபிசோடு என்பதால் கமல் தன்னுடைய பஞ்சாயத்தை நடத்த வந்துவிட்டார்.

இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டைட்டில் ஜெயித்த அமுதவாணனால் ஆட்டம் மாறி போச்சி என கமல் கூறி இருக்கிறார் .

டிக்கெட் டூ ஃபினாலே வெற்றியாளர்

டிக்கெட் டூ ஃபினாலே வெற்றியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்கை பல போராட்டங்களுக்குப் பிறகு அமுதவாணன் வெற்றி பெற்று இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த போட்டியில் மைனா அதிகமான டைல்ஸ்களை பெற்றிருந்தார். பின்பு அவரோடு அவரை தொடர்ந்து அமுதவாணன் பல போட்டிகளில் ஜெயித்து அதிகமான டைல்ஸ்களை பெற்றிருந்தார். கடைசியில் அமுதவாணன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு டிக்கெட் டூ பினாலே டைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அசீம் இந்த போட்டியில் ஜெயித்து இறுதி வாரத்தில் நுழையும் முதல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல தற்போதைய சீசனில் அமுதவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

கமலஹாசனின் பஞ்ச் வசனம்

கமலஹாசனின் பஞ்ச் வசனம்

இந்த நிலையில் இன்று இந்த வாரத்திற்கான பஞ்சாயத்துக்களை பேசுவதற்காக கமல் வந்து விட்டார். கமல் இந்த வாரம் என்ன பேச போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த நிலையில் இன்று வழக்கம் போல பிரமோ லேட் ஆகிவிட்டது. இதை குறித்து நெட்டிசன்கள் பலரும் ப்ரோமோவில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் கமல்ஹாசன், "போன வாரம் நான் இப்படி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதானா என்று கேட்டவர் எப்போதும் போல சளைக்காமல் உழைத்து வெற்றிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

இதுதான் க்ளூவாக இருக்குமோ

இதுதான் க்ளூவாக இருக்குமோ

கமல்ஹாசன் பேசும்போதே தெரிகிறது இன்று அமுதாவாணனின் வெற்றியை குறித்து தான் கமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது அதோடு இவரது இந்த வெற்றி இந்த ஆட்டத்தையே மாற்றி அமைத்து விட்டது. எந்த அளவிற்கு என்று கூற, உள்ளே நாமினேஷனில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களின் முகமும் குளோசப்பில் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக ரச்சிதாவின் முகத்தை காட்டுகின்றனர். இதனாலே ரசிகர்கள் இந்த வாரம் வெளியேற்றப்படுவது ரச்சிதா தான் என்று கருத்து கூறி வருகிறார்கள்.

மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா

மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா

ஏற்கனவே வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் அமுதவாணன் இருந்து வந்தார். இதனால் அமுதவாணன் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் அமுதவாணன் நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வான நிலையில், அவரைத் தொடர்ந்து இருக்கும் ஷிவின் அல்லது ரச்சிதா இருவரில் யாரேனும் ஒருவர் வெளியேற்றப்படுவதற்கு தான் அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து கூறி வந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரச்சிதா வெளியேற இருக்கிறாராம் ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் நடைபெற்று விடாதா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+