பிக்பாஸ் 6:"அதெல்லாம் முடியாது” ஜி.பி முத்துக்கு இதை செய்தே ஆக வேண்டும்...குழந்தைகள் சொன்ன வார்த்தை
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தன்னை வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய குழந்தைகள் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஜி பி முத்துவிற்காகவே தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனை அதிகமான ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில் ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து ஜி பி முத்து வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்.

ஜி.பி முத்துக்காக ரசிகர்கள் செய்த செயல்
விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிச்சைமான நபராக இருக்கும் ஜி பி முத்து ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவருடைய நகைச்சுவையான கேரக்டர் ரசிகர்களை கவர்ந்த விதமாக இருப்பதால் இவருக்காகவே பலர் இந்த சீசனை பார்த்து வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர் இந்த சீசனில் கலந்து கொள்கிறார் என்று சொன்னதுமே இவருடைய ரசிகர்கள் பலர் இவருக்காக பேன்ஸ் பேஜ்களை ஓபன் செய்து விட்டனர்.

ஜி.பி முத்துவின் விருப்பம்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் கமலோடு ஜிபி முத்து பேசிய வார்த்தைகள் சமூக வலைத்தள அதிக அளவில் டிரெண்டாக வலம் வந்தது. ஆதாம் தெரியுமா? என்று ஜிபி முத்துவிடம் கமல் கேட்டதற்கு யார் அவர் என்று ஜிபி முத்து எதிர் கேள்வி கேட்டதற்கு பெரிய அளவில் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது .இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தலைவராக ஜிபி முத்து தான் இருந்து வருகிறார் .கடினமான டாஸ்க்கில் விளையாடி இந்த தலைவர் பதவியை பெற்றிருக்கும் நேரத்தில் ஒரு சில நாட்களாக தன்னுடைய குடும்பத்தை நினைத்து அவர்களை பார்க்க வேண்டும் என்று ஜிபி முத்து விருப்பம் தெரிவித்து வருகிறார்.

இது வழக்கமானது தான்
ஜிபி முத்து சாதாரண ஒரு மரவேலை, தங்க வேலை செய்து கொண்டிருந்தவர் .டிக் டாக் மூலமாக உலகம் எல்லாம் பிரபலம் ஆகி இருக்கிறார். தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். பல இடங்களுக்கு இவர் சென்று கொண்டிருந்தாலும் ஒரு சில நாட்களுக்கு மேலாக எங்கேயும் ஜிபி முத்து தங்க மாட்டாராம். அதை தன்னுடைய டிக் டாக் வீடியோக்களில் யூடூப் வீடியோக்களிலும் அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். ஒரு சில நாட்களுக்கு மேலே என் குடும்பத்தை பார்க்காமல் இருந்தால் எனக்கு ஏதோ போல ஆகிவிடும் அதனால் சீக்கிரமாக வீட்டுக்கு போய் விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

மகன்கள் பேசிய வீடியோ
கடந்த சீசனில் ஜி பி முத்து கலந்து கொள்வார் என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தன்னால் போன் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சீசனில் இவர் கலந்து கொள்ளும்போது தன்னால் எத்தனை நாட்கள் உள்ளே இருக்க முடிகிறதா? அதுவரைக்கும் தான் இருப்பேன் என்று கூறிதான் கலந்து கொண்டு இருந்தாராம். ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் தன்னுடைய மகன் மற்றும் குடும்பம் நினைவு வந்து கொண்டே இருக்கிறது என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் ஜி பி முத்துவிற்கு அவருடைய மகன் விஷ்ணு மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பேசிய வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதுதான் பதில்
அந்த வீடியோவில் அப்பா நீங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே இருந்து நூறு நாட்கள் கழித்து தான் வெளியே வர வேண்டும் என்று அவருடைய மகன் விஷ்ணு கூறுகிறார். அதோடு பிக் பாஸ் எங்க அப்பாவை 100 நாள் உள்ளே வைத்து விடுங்கள் வெளியே அனுப்பாதீர்கள் என்று வேற கூறி இருக்கின்றனர் .அப்போது அருகில் இருக்கும் ஜி பி முத்துவின் மனைவி நிகழ்ச்சியில் ஜெயித்து விட்டு வரணும் என்று சொல்லு என்று சொல்லிக் கொடுக்கிறார். அதுபோல மற்ற குழந்தைகளும் சொல்கின்றனர். இதனால் ஜி பி முத்து தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருப்பாரா? இல்லை இந்த வாரமே வெளியேறி விடுவாரா? என்று குழப்பத்தோடு என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications