பண பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறும் போட்டியாளர்.. இணையத்தில் வெளியான தகவல்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று ரச்சிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் ரசிகர்கள் எதிர்பார்த்த பணம் மூட்டை போட்டியாளர்கள் முன்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே கதிர் கூறியது போல இந்த முறை பணமூட்டையை தூக்கிக் கொண்டு இந்த வாரம் கதிர் வெளியேற இருக்கிறாராம்.

மீண்டும் வந்த போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கின்றது. கடைசி வாரத்தை எட்டி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு முன்னேறி இருக்கின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து எவிக்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கின்றனர் பிக் பாஸ் வீடு மீண்டும் களைகட்டி இருக்கும் நேரத்தில் இன்று எதிர்பாராத சில நிகழ்வுகளும் நடக்க இருக்கிறதாம். ஏற்கனவே கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ரச்சிதா இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

பண மூட்டை
ஒரு சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வந்த வண்ணமாக இருந்த நிலையில் ரச்சிதா வரவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர் என்று அந்த குறை நிவர்த்தி ஆகி இருக்கிறது. ரச்சிதாவும் ஆயிஷாவும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அங்கே பணமூட்டை வைக்கப்படுகிறது. அதை உள்ளே இருக்கும் ஆறு போட்டியாளர்களில் யார் எடுக்க போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

பண பெட்டிக்காக காத்திருப்பு
அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் பண பெட்டி டாஸ்க்காக காத்திருக்கும் கதிரவன் இந்த முறை இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பணமூட்டையோடு வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைக் குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு மீம்ஸ்களும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்து அசீம் முதலில் பணப்பெட்டியில் 40 லட்சத்திற்கும் மேலே இருந்தால் நான் எடுத்துக் கொண்டு சென்று விடுவேன் என்று கூறியிருந்தார். அவரை தொடர்ந்து கதிரவனும் மற்றும் மணிகண்டன் பண பெட்டியில் நான் எதிர்பார்த்த அளவு தொகை வந்தால் நான் தூக்கி விடுவேன் என்று கூறியிருந்தார்.

சிறப்பான முடிவு
அந்த வகையில் இன்று பணமூட்டையை இறுதியில் கதிரவன் தூக்கிக்கொண்டு செல்ல இருக்கும் நிலையில் அவர் தவிர மீதம் இருக்கும் விக்ரமன், அசீம், ஷிவின்,அமுதவாணன், மைனா என ஐந்து போட்டியாளர்களும் இறுதிப்போட்டியாளர்களாக கடைசி வாரத்தில் உள்ளே நுழைய இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் எப்பவோ பெட்டியை கட்டிக் கொண்டு போக வேண்டிய கதிர் இப்போ மூட்டையோடு வெளியே செல்ல இருக்கிறாரா? என்று கலாய்த்து வரும் நிலையில் கதிர் இன்று வெளியே பணத்தை எடுத்துக்கொண்டு வந்தால் சிறப்பான பிக் பாஸ் போட்டியாளர் அவர் எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் இந்த வாரம் பணமூட்டையை தூக்கிக்கொண்டு சென்றால் அவர் எடுக்கும் சிறப்பான முடிவாக இருக்கும் என்று பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications