"இனி நான் யாருன்னு காட்டுறேன்” மணிகண்டன் விரக்தியில் எடுத்த முடிவு.. தொடங்கியது புது பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பதினாறாவது நாளில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இன்றைய முதல் பிரமோவில் கடும் கோபத்தில் மணிகண்டன் விரக்தியில் பேசுவதை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
மணி கண்டனின் பொம்மையை எடுக்காமல் சக போட்டியாளர்கள் அலட்சியம் செய்ததால் இன்று புது பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் புது புது பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக தான் பிக் பாஸ் அணியினர் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சீசனில் பொம்மை டாஸ்க் மூலமாகத்தான் நிரூப் மற்றும் வருண் இடையே பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அதே டாஸ்கை தற்போதைய ஆறாவது சீசனிலும் பிக் பாஸ் வைத்திருக்கின்றனர். இன்றைய பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்று டாஸ்கை தொடங்கி இருக்கிறார்கள்.

டாஸ்க் விதிமுறை
ஒரு அட்டை பெட்டிக்குள் 19 பொம்மைகள் வைக்கப்பட்டு இருக்கின்றது அந்த 19 பொம்மைகளில் போட்டியாளர்களின் பெயர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் பார்க் ஹவுஸில் 18 பொம்மைகள் வைப்பதற்கு தான் அறைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு பொம்மைகளை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் வைக்க வேண்டும். யார் பொம்மை கடைசி வரை எடுக்காமல் அட்டை பெட்டிக்குள் இருக்கிறதோ அவர் கேமை விட்டு வெளியேற வேண்டும். இது ஏற்கனவே நடந்த சீசனில் நடந்ததாக இருந்தாலும் இன்றைய சீசனில் இது தொடங்கி இருக்கிறது.

ஓட்டம் பிடித்த போட்டியாளர்கள்
டாஸ்க் தொடங்கியதும் போட்டியாளர்கள் ஓட்டம் பிடித்து அட்டை பெட்டிக்குள் கிடந்த பொம்மைகளை எடுத்து பார் ஹவுசில் இருக்கும் ஷோகேஸில் அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். கார்டன் ஏரியாவில் வைத்திருக்கும் பல தடுப்புகளை தாண்டி போட்டியாளர்கள் ஓடி சென்று தங்கள் கையில் இருக்கும் பொம்மையை காப்பாற்றி விட வேண்டும் என்று செல்கின்றனர். அதில் ராபர்ட் மாஸ்டர் ஓடுவதை பார்ப்பதற்கு என்ன நடக்குமோ என்று பயப்பட தான் தோன்றுகிறது. அந்த அளவிற்கு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

இன்று சம்பவம் இருக்கு
கடைசியில் எல்லா போட்டியாளர்களும் தாங்கள் கையில் எடுத்த பொம்மைகளைக் கொண்டு ஷோகேஸில் அடுக்கிய பிறகு அட்டைப்பெட்டிக்குள் இருப்பது மணிகண்டனின் பொம்மைதான். அதனால் மணிகண்டன் செம கடுப்பாகி இருக்கிறார். தன்னுடைய பெயர் வைத்த பொம்மை அட்டை பெட்டிக்குள் கிடப்பதை எடுத்து தூர வீசியபடி அவ்ளோ பண்ணியும், என் பொம்மையை நீங்க எடுக்காம விட்டுட்டீங்களே? இனி நான் யாருன்னு நான் காட்டுகிறேன்! என்று பேசிக்கொண்டு செல்கிறார். இதை பார்த்து சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தான். இந்த ப்ரோமோவை பார்த்ததும் இன்று சரியான சம்பவம் நடக்க போகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications