என்ன என்ன கதை சொல்றாங்க பாருங்க..இந்தவார எவிக்ஷனில் சிக்கிய சில்வண்டுகள்..அந்தநபர் தப்பித்துவிட்டார்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 மூன்றாவது வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது.
கடந்த வாரம் கமல் முன்னிலையில் சில போட்டியாளர்களுக்கு கிடைத்த ரோஸ்ட் காரணமாக சக போட்டியாளர்களால் ஒரு சில போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இரண்டு வாரம் தொடர்ந்து நாமினேஷனில் இருந்த மகேஸ்வரி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிவிட்டார்.

மூன்றாவது வார நாமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரமே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுதான் தற்போது கூட அதுதான் நடைபெற்றிருக்கிறது. இந்த வார மூன்றாவது நான் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது. இதில் சக போட்டியாளர்கள் தங்களோடு இருக்கும் போட்டியாளர்களை பற்றி கருத்துகளை கூறி நாமினேஷன் செய்து வருகின்றனர். அதில் இந்த முறை கமல் கூறிய அத்தனை வார்த்தைகளையும் புது ஸ்டேட்டர்ஜி ஆக பயன்படுத்தி ஒரு சில ஒரு சில போட்டியாளர்களை மட்டும் டார்கெட் செய்திருக்கின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்த வெளியேற்றம்
கடந்த வாரம் முழுக்க அசல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் கருத்து கூறி வந்தனர். அவர் சக பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்து கொண்டிருந்தனர் அந்த நேரத்தில் மீண்டும் தனலட்சுமி பற்றி பொய்யான கருத்தை கூறியதால் அசிம் வெளியேற வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வாக்குகளின் அடிப்படையில் அசல் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்களிடமும் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது .இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை முதல் நாளில் வழக்கமாக நடக்கும் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது.

போட்டியாளர்கள் கூறிய குற்ற சாட்டுகள்
அதில் ரொம்ப டாமினேட் பண்ற மாதிரி இருக்கு, அத்துமீறி பேசுறது பிடிக்கல, இஷ்யூவை பெருசு பண்ண நினைக்கிறாங்க, எந்த சண்டைகளுக்கும் நிக்க மாட்டேங்குறாங்க, தேவையில்லாத வார்த்தைகளை யூஸ் பண்றாங்க, ஹெல்த்த பகடைக்காயா பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் சக போட்டியாளர்கள் அதிகமாக பயன்படுத்தி இருக்கின்றனர் .இதில் இருந்தே ரசிகர்களால் யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் இந்த வார ஓட்டுகளின் அடிப்படையில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே நாமினேஷனில் வந்திருக்கின்றனர்.

இந்த வார எலிமினேஷன் லிஸ்ட் போட்டியாளர்கள்
ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற பொம்மை டாஸ்க்கில் ஜெயித்த மூன்று போட்டியாளர்களாந ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், ராம் இவர்கள் மூன்று பேரும் இந்த வார எலிமினேஷனில் தப்பித்துக் கொள்கின்றனர். அதனால் சக போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்ட லிஸ்டில் முதலிடத்தில் அசீம், அவரைத் தொடர்ந்து ஆயிஷா, அவரைத் தொடர்ந்து ஷெரினா, அதற்கடுத்ததாக கதிரவன் கடைசியில் விக்ரமன் என ஐந்து பேர் இருக்கின்றனர். கடந்த வாரம் விக்ரமின் பெயர் இல்லாத நிலையில் இந்த வாரம் அவருடைய பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து நாமினேஷனில் இருந்து வந்த மகேஸ்வரி இந்த முறை தப்பித்து இருக்கிறார். பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications