ஆட்டத்தை தொடங்கிய ஜி பி முத்து..!! அட பேசிகிட்டு இருக்கும்போது இப்படியா பண்ணுவாங்க.!!?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கிய முதல் நாளிலே ஆட்டம் பாட்டம் களைகட்டி இருக்கிறது.
கடந்த சீசனிலே அதிகமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளரான ஜி பி முத்து இந்த சீசனில் கலந்துள்ளார்.
மழையில் நனைந்தபடியே ஜி முத்து முத்து போட்ட ஆட்டத்தை பார்த்து போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் என்ஜாய் பண்ணி வருகிறார்கள்.

டிக் டாக் பிரபலம்
விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல போட்டியாளர்கள் இந்த சீசனில் அறிமுகமாகி இருக்கின்றனர். நடிகர்கள் மட்டுமல்லாமல் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து இந்த சீசனில் அறிமுகம் ஆகி இருப்பது அவருடைய ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஜி பி முத்து நான் சந்தோசமாக இருக்கிறேன். நீங்களும் சந்தோஷமாக இருங்கள் என்று தனக்கே உரிய பாணியில் முத்தத்தை பறக்க விட்டிருக்கிறார்.

மனதை மாற்றிய பிக் பாஸ்
இந்த சீசனில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தாலும் பிரபலங்கள் பலருக்கும் பரிச்சயமான ஒரே நபராக இருக்கும் ஜிபி முத்துவுக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு குவிந்து வருகிறது. இவருடைய ஆதரவாளர்களும், எதிர்ப்பவர்கள் கூட இவருக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருவதாக கமெண்ட்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை பிளான் பண்ணி தான் விஜய் டிவியும் ஜிபி முத்துவின் மனதை மாற்றி இங்கு கொண்டு வந்து இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். பிக் பாஸுக்கு நான் வரவே மாட்டேன் என்னால் போன் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறி வந்த ஜி பி முத்து இப்போது படு உற்சாகமாக தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார்.

கலாய்ப்புக்கு அஞ்சுவதே இல்லை
உடன்குடியை சார்ந்த சாதாரண ஒரு நபர் தன்னுடைய உடல் அசைவின் மூலமாகவும், பேச்சு திறமையின் மூலமாகவும் இன்று பலருக்கும் பிரபலமாகி இருக்கிறார். இதனால் இவர் மீது காண்டான ஒரு சிலர் இவர் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் மீம்ஸ்களால் கலாய்த்து வருகிறார்கள். தன்னை கலாய்ப்பவர்களை கண்டு கொள்ளாத ஜி பி முத்து இன்றைய எபிசொட்டில் உள்ளே இருக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார். போட்டியாளர்கள் பலரும் கலாய்க்கும் ஒரே நபராக ஜிபி முத்து இருக்கிறார். எப்போதுமே கலாய்ப்புக்கு அஞ்சாத ஜி பி முத்து தற்போது போட்டியாளர்கள் செய்யும் சேட்டைகளை கண்டு பயந்தாலும் ரசிகர்களையும் போட்டியாளர்களையும் சிரிக்க வைக்க மட்டும் தயங்கவே இல்லை.

மழையில் ஆட்டம்
தற்போது வெளியான ப்ரோமோவில் முழுக்க முழுக்க ஜி பி முத்துவின் அட்ராசிட்டி மட்டும்தான் பதிவாகி இருக்கிறது. ப்ரோமோ ஆரம்பம் ஆனதுமே ஜிபி முத்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறியபடி தட்டில் சாப்பாடுகளை வைத்து அதை கேமரா முன்பு காட்டிக் கொண்டிருக்கிறார். எப்போதுமே கேமராவுக்கு பழகிப்போன ஜி பி முத்து தற்போது இத்தனை கேமராவை கண்டால் சும்மா விடுவாரா? என்று சொல்லும் வகையில் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறார். அதற்கு அடுத்தது அவர் மழையில் நனைந்தபடியே அவர் போடும் ஆட்டத்தை பார்த்து இன்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொட்டி கிடைக்கிறது என்று கூறி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இவருடைய இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக இன்று எப்படியும் பிக் பாஸ் பார்த்து விடுவதாக கமெண்ட்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications