எதிர்பாராத ட்விஸ்ட் இந்த வாரம் வெளியேறப் போகிறவர் இவரா? கடந்த வாரத்தை போலவே கடைசி நேர மாற்றமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரத்திலும் எதிர்பாராத வெளியேற்றம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியேறி இருக்கிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை முதல் முறையாக இன்று இரவு வரை மட்டுமே ரசிகர்களால் வாக்கு செலுத்த முடியும்.
இந்த நிலையில் இப்ப வரைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளரின் பெயர் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரமாக கமல் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே தற்போது பல மாற்றங்கள் அதிரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் வாக்குகளின் அடிப்படையிலேயே போட்டியாளர்களை வெளியேற்றிக் கொண்டிருந்த பிக் பாஸ் கடந்த வாரம் என்ன காரணத்தினால் ஜனனியை வெளியேற்றினார்கள் என்பது இப்ப வரைக்கும் வெளியே தெரியாத வகையில் தான் இருந்து வருகிறது. வாக்குகளின் அடிப்படையில் ஜனனி மூன்றாவது இடத்தில் சேவ் ஆகி இருந்தாலும் திடீரென அவர் வெளியேற்றப்பட்டு இருந்தார்.

கடைசி நேரம் ட்விஸ்ட்
அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக ஓட்டு அளிக்கும் நாட்களில் எண்ணிக்கையையும் குறைத்து இருக்கின்றனர். இதுவரைக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை ரசிகர்களால் வாக்கு செலுத்த முடியும் ஆனால் இப்பொழுது வியாழன் இரவு வரைக்கும் மட்டுமே வாக்கு செலுத்த முடியும் என்று சேனல் தரப்பில் இருந்து கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் இப்ப வரைக்கும் வாக்குகளின் அடிப்படையில் மைனாநந்தினி தான் கடைசி இடத்தில் இருந்து வருகிறார்.

கடந்த வாரம் நடந்தது
கடந்த வாரமும் இதே போல தான் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் மணிகண்டன் குறைவாக இருந்தார் அதனால் அவர்தான் வெளியேறுவார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஏடிகே வெளியேறுவதாக இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் ஜனனி வெளியேற்றம் நடந்து விட்டது. இந்த மாதிரி தற்போது நடைபெறுமா? அல்லது மைனா நந்தனியை வெளியேற்றப்படுவாரா? என்பது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கும் ஒன்றாக இருந்து வருகிறது ஆனாலும் மைணா நந்தினி விஜய் டிவியை சேர்ந்தவர் என்பதால் அவர் பாதுகாக்கப்படலாம் என்பது பலருடைய கருத்துக்கணிப்பாக இருந்து வருகிறது.

கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்
இரண்டு நாட்களாகவே மைனா நந்தினி மற்றும் ஷிவின் தனலட்சுமி மூன்று பேருமே மாறி மாறி கடைசி இடத்தில் இருந்து வருகின்றனர். இந்த இடத்தில் யார் வெளியேறுவார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தாலும் இவர்களில் யார் வெளியேறினாலும் விளையாட்டின் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைய தான் செய்யும் என்பது ஒரு சிலருடைய கருத்தாக இருந்து வருகிறது. அதுவும் தற்போது நடந்துவரும் பிக் பாஸ் பள்ளி கல்லூரி டாஸ்க்கில் மைனா நந்தினி நடந்து கொள்ளும் விதம் ஜாலியாக இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் அவர் காமெடி என்கிற பெயரில் கழுத்தை அறுக்கிறார் என்று அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாலேயே என்னவோ அவர்தான் அதிகமாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் பரவி வருகிறது. ஆனாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் கூட மாற்றம் நடக்க வாய்ப்பிருக்கிறது.












Click it and Unblock the Notifications