ஆரம்பத்தில் ரட்சிதா செய்த உதவி.. ஒருவேளை சாப்பாட்டுக்கு போராட்டம்.. மைனா நந்தினியின் கண்ணீர் கதை
சென்னை: பலரையும் சிரிக்க வைத்து எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் மைனா நந்தினி தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையை குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் பேசியிருக்கிறார்.
சத்துணவு சாப்பாட்டிற்காகவே அவருடைய பள்ளி வாழ்க்கை தொடங்கி இருக்கிறதாம்.
சீரியல்களில் நடிக்கும் போது உடுக்க சரியான உடை கூட இல்லாமல் பல நேரங்களில் அவதிப்பட்டு இருக்கிறார் ஆரம்ப காலத்தில் அவருக்கு நடிகை ரட்சிதா செய்த உதவியைப் பற்றி நன்றியோடு நினைவு கூர்ந்து இருக்கிறார்.

தெரியாத சோக கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மைனா நந்தினி உள்ளே வந்திருக்கிறார்.இந்த சீசன் ஆரம்பம் ஆகும் நிலையில் இருந்து ரசிகர்களால் எதிர் பார்க்கப்பட்ட பட்டியலில் மைனா நந்தினியின் பெயர் இடம் பிடித்திருந்தது . ஆனால் அவர் முதல் நாளில் வரவில்லை என்றதும் இதுவும் பொய்யான செய்தியாக இருக்கும் என்று நினைத்த நிலையில் தான் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் உள்ளே அறிமுகமாகி இருக்கிறார். எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் நந்தினி தன்னுடைய சோகமான மறு பக்கத்தை பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியிலகதை சொல்லும் டாஸ்க் கூறி இருக்கிறார்.

சத்துணவு சாப்பாடு
மைனா நந்தினியின் அம்மா அப்பா இருவருமே துணிக்கடையில் தான் வேலை செய்து வந்தார்களாம். அவர்கள் அங்கு பல மணி நேரம் நின்று கொண்டு தான் வேலை செய்து வந்தாலும் வீட்டில் வந்து இருவருமே படும் கஷ்டத்தை மைனா நந்தினி பார்த்திருக்கிறாராம். ஆரம்ப படிப்பு கூட சத்துணவு கிடைக்கும் என்பதற்காக தான் இவரை பள்ளிக்கு அனுப்பி இருக்கிறார்கள். மைனா நந்தினிக்கு படிப்பு சரியாக வராது அதனால் படிப்பை விட்டு விட்டு நடிப்புத் துறைக்கு வந்திருக்கிறார். நடிக்க வரும்போது குடும்பத்திலும் சுற்றி இருந்தவர்களும் பலவிதமாக பேசி வந்தார்களாம்.

ரயில்வே ஸ்டேஷனில் தூக்கம்
சென்னைக்கு வந்து உறவினியன் வீட்டில் தங்கி கொண்டு தான் நடிக்க வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் இவருக்கு ஒருநாள் சம்பளம் 1500 ரூபாய் கொடுத்தார்களாம். ஐந்து நாட்கள் மட்டுமே மாதத்தில் வேலை இருக்குமாம். இவருடைய இந்த வருமானத்தில் தான் குடும்பத்தில் வீட்டு வாடகை எல்லாம் கொடுத்து வந்திருக்கின்றனர் .உறவினரின் வீட்டுக்கு சூட்டிங் முடிந்து செல்வதற்கு நேரம் ஆகும் என்பதால் ரயில்வே ஸ்டேஷனில் பல நாட்கள் தூக்கி இருக்கிறாராம்.

ரட்சிதா செய்த செயல்
சரவணன் மீனாட்சி சீரியல் நடிக்கும் போது மைனாவிடம் 4 உடை தான் இருந்ததாம். அவருக்கு ரட்சிதா தான் பல உடைகளை கொடுத்து உதவி செய்திருந்தாராம். சூட்டிங் ஸ்பாட்டில் பல நேரங்களில் இவருக்கு சாப்பாடு கிடைக்காமல் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் வெறும் சாம்பார் மட்டும் குடித்து இவர் நடித்து முடித்திருக்கிறார். அதுபோல சூட்டிங் ஸ்பாட் பக்கத்தில் இருக்கும் கோவில்களில் கிடைக்கும் சாப்பாடுகளை தான் இவர் சாப்பிட்டு இருக்கிறாராம். ஆரம்பத்தில் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்து வந்த மைனா அதற்குப் பிறகு திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்று இவர் எடுத்த முடிவு முதல் திருமணத்தில் மூலமாக பெரிய ஏமாற்றம் தான் கிடைத்ததாம்.

பிக் பாஸ் வர காரணம்
இப்ப கூட வெளியே சென்றால் மைனா நந்தினி இடம் பலரும் நீங்க எங்கேயோ தோத்து விட்டீங்க, எதையோ மிஸ் பண்ணிட்டீங்க என்றெல்லாம் அறிவுரை கூறுவதற்காக ஒரு கூட்டம் வந்திருக்கிறது. அவர்களின் முன்பு தன் திறமையும் நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். எப்போதுமே அடுத்தவர்களை நையாண்டித்தனமாக கலாய்த்து கொண்டு ஜாலியாக இருக்கும் மைனா நந்தினிக்குள் மற்றொரு கஷ்டமான சோகமான மறுபக்கம் இருப்பது பலருக்கும் வியப்புதான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications