பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜி.பி முத்து கொண்டாடிய பங்க்ஷன்..இதனால் தான் இவர் வெளியே வந்தாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக இருந்த ஜி பி முத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி குழந்தைகளோடு மகிழ்ச்சியாக தீபாவளி ஃபங்ஷனை கொண்டாடி வருகிறார்.

பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டு இருக்கும்போது ஜி பி முத்து நடு தெருவில் செய்த செயல் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

எதிர்பார்த்த போட்டியாளர்கள்

எதிர்பார்த்த போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பிக்கும் முன்பு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.காரணம், இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று போட்டியாளர்கள் விவரங்களை ரசிகர்கள் அதிகமாக கெஸ் பண்ணி வைத்திருந்தனர். அதில் பலரும் பரிச்சயமான முகங்களாகவே இருந்தனர். அதில் ஒருவராக ஜிபி முத்துவும் இருந்து வந்தார். சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் இருப்பதால் இவருக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறி வந்தனர்.

குழந்தைகளின் மீது பாசம்

குழந்தைகளின் மீது பாசம்

ஜி பி முத்து இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்துவிட்டு தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று குழந்தை தனமாக அடம்பிடித்துக் கொண்டிருந்தார். ஒரு வார காலமாக இவர்கள் எப்போது வெளியேற்றுவார்கள் என்று ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் வீட்டிற்குள் அனுபவித்த கஷ்டங்கள் ரசிகர்களிடம் இவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடைய குழந்தை விஷ்ணுவின் மீது அதிகமாக பாசத்தை வைத்திருக்கும் ஜி பி முத்து தான் இந்த நிகழ்ச்சியில் வந்து விட்ட பிறகு என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் என்ன ஆயிருக்குமோ என்று பரிதவித்தபடியே இவர் புலம்பி வந்தார்.

வெளியே வந்து செய்த முதல் செயல்

வெளியே வந்து செய்த முதல் செயல்

பிக் பாஸ் மற்றும் கமல் என அனைத்து தரப்பினரும் இவரிடம் பேசி பார்த்த பிறகும் இவர் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்காமல் தான் இருந்ததால் கமல் இவரை வெளியே செல்லலாம் என்று இவருக்கு அனுமதி கொடுத்து இவரும் வெளிய வந்துவிட்டார். தற்போது ஜி பி முத்து குழந்தைகளோடு இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மகன் தன்னை பார்க்காமல் வாடி போய்விட்டதாக ஏற்கனவே நேற்றைய வீடியோவில் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து உருக்கமாக பேசி இருந்தார்.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

இன்று தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறியபடி ஜி பி முத்து மகிழ்ச்சியாக தன்னுடைய குழந்தைகள் மற்றும் தெருவில் உள்ள உறவினர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இப்படி ஜாலியாக இருந்த மனுஷன் ஒரு சில நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் மன அழுத்தத்தால் இருந்ததை பார்த்து ரசிகர்கள் இதனால்தான் இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து விட்டார் போல, தீபாவளிக்கு எப்படியும் குழந்தைகளோடு சென்று கொண்டாடி விட வேண்டும் என்று எதிர்பார்ப்பில் வெளியே வந்து விட்டார் என்று கூறி வருகிறார்கள்.ஆனால் இன்னும் ஒரு சில ரசிகர்கள் ஜி பி முத்துவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இவர் எப்படியும் இந்த சீசனின் டைட்டில் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+