Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டைட்டில் ஜெயித்த பிறகு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அசீம் வெளியிட்ட முதல்வீடியோ..பிரச்சனை இதுதானாம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் அசீம் இரண்டு நாட்களாக வீடியோ வெளியிடாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இரண்டு நாட்கள் கழித்து முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தனக்கு இதுவரைக்கும் ஓட்டு அளித்து ஒவ்வொரு முறையும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

இரண்டு நாட்களாக தனக்கு அதிகமான வேலை இருந்ததாகவும் அதனால் தான் தன்னால் வீடியோ வெளியிட முடியவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இரண்டு நாட்களாக காணவில்லை

இரண்டு நாட்களாக காணவில்லை

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 106 நாட்கள் ஒளிபரப்பாகி ஞாயிற்றுக்கிழமை தான் முடிவுக்கு வந்தது .இந்த நிகழ்ச்சியை முடிவடைந்த பிறகும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு சமூக வலைத்தளத்தில் அதிகமாக நடந்து வருகிறது. இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இது நெட்டிசன்கள் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. ஆனாலும் அசீமுடைய ரசிகர்கள் இதனை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்களாக ஆகியும் அவருடைய ரசிகர்களிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் செய்யவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் ரசிகர்களுக்கும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

ரசிகர்களிடம் மன்னிப்பு

ரசிகர்களிடம் மன்னிப்பு

இந்த நிலையில் முதன் முதலாக அசீம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில்
உலகெங்கும் வாழும் என் இனிய தமிழ் சொந்தங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள், முதலில் நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் காரணம், இரண்டு நாட்களாக எந்த வீடியோவும் வெளியிட முடியவில்லை. நான் போனை எடுக்கவில்லை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 106 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருந்துவிட்டு பிறகு மனிதர்களை பார்த்த பிறகு எனக்கு அந்த ஒரு நிகழ்விலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை அதனால் தான் நான் வீடியோ வெளியிடவில்லை.

நன்றி மழை

நன்றி மழை

இன்னைக்கு தான் நான் போனை எடுத்தேன் எடுத்ததும் என்னுடைய மக்களுக்கு நான் வீடியோ வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். அவங்க இல்லன்னா நான் இல்லை என்று நினைக்கிறேன். நான் என்னுடைய தமிழ் பெருங்குடி சொந்தங்களுக்கும் உலகெங்கும் வாழும் என் இனிய தமிழ் மக்களுக்கும், என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் தமிழ் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் உயிர் அன்பு உறவுகளுக்கும் ஒரு எளிய தாய் மகனின் நன்றி கலந்த கோடான கோடி நன்றிகள் என்று கையெடுத்து கும்பிட்டு கூறியிருக்கிறார்.

நினைவாக்கிய ரசிகர்கள்

நினைவாக்கிய ரசிகர்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கப்பு அடித்து விட்டோம் நான் இந்த வீட்டுக்குள்ள 106 நாட்கள் விளையாடியது என்னமோ நான் தான். ஆனா நான் விளையாடும் போது பல இகழ்ச்சிகளையும் பேச்சுகளையும் பல துன்பங்களையும் சங்கடங்களையும் சந்திக்கும் போதெல்லாம் நான் எந்த இடத்திலும் நம்மளுடைய கான்ஃபிடன்ஸ் விட்ற கூடாது நம்பள நம்பி தான் விளையாடனும்னு தான் நான் போனேன். என்னுடைய நம்பிக்கையை நீங்க வெளிப்படுத்தினீங்க, ஒவ்வொரு வாரமும் என்னை நாமினேட் செய்யும் போதும் 14 வாரமும் நான் நாமினேட் ஆனாலும் நான் பைனல் போவேன் என்று சொன்ன வார்த்தையை உண்மையாகி நினைவாக்கி நிஜமாக்கினது என்னுடைய தமிழ் மக்கள் ஆகிய நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ரன்னரான விக்ரமன் நேற்று வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் இன்று வின்னர் அசீம் தன்னுடைய ரசிகர்களிடம் முதல் முறையாக வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார் இதை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+