பிக் பாஸ் 8: நியாயமா இது? இப்படி எல்லாம் பேசலாமா? ரஞ்சித்துக்காக வீடியோ வெளியிட்ட ஏடிகே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ரஞ்சித், சௌந்தர்யா நெற்றியில் முத்தம் கொடுத்ததை வைத்து இணையத்தில் அதிகமானோர் விமர்சித்து வரும் நிலையில் இதில் ரஞ்சித்துக்கு ஆதரவாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஏடிகே வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள்தான். அதில் சமீபத்தில் கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு அதிகமான விமர்சனங்களில் சிக்கிக்கொண்டிருக்கும் நடிகர் ரஞ்சித் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியல் உட்பட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருடைய உண்மையான கேரக்டர் என்ன என்பது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அதை ஒரு புரிய வைப்பதற்காக தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். நான் வீட்டில் ஒரே ஒரு பிள்ளையாக பிறந்ததால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அண்ணன், தம்பி, தங்கை என்று பல உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மக்கள் என்னுடைய நிஜக் கேரக்டரை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ரஞ்சித் கூறி இருந்தார். ஆனால் நிகழ்ச்சி தொடக்கத்தில் விஜய் சேதுபதி, இது சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்து ரசித்த ரஞ்சித் வேறு விதமாக இருந்தார். கடைசியாக இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு அவர் பேசும் விதம் வேறு விதமாக இருக்கிறது.
இதில் எது உண்மையான ரஞ்சித் என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது என்று ரஞ்சித்தை தாக்கி பேசி இருந்தார். ஆனாலும் அதை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் ரஞ்சித் நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். நேற்றைய எபிசோடில் கூட பெண் போட்டியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக ரவீந்திரோடு சண்டை போடுவது போன்று பிராங்க் சண்டைக்கு இவர்தான் கதை, இயக்கம் என எல்லாவற்றையும் செய்திருந்தார்.
அந்த சண்டை முடிவில் திடீரென்று சௌந்தர்யாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து இருந்தார். பிறகு ஜாக்குலின் கன்னத்தை பிடித்து கிள்ளியபடி ஓடி சென்றிருந்தார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இன் போட்டியாளரான ஏ டி கே வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் சமூக வலைத்தளத்தில் ஒரு சம்பவம் எப்படி பார்க்கப்படுகிறது என்பது நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகளை வைத்து நான் கவனித்தேன். நேற்று ரஞ்சித் தாங்கள் வெற்றி பெற்றதும் அந்த மகிழ்ச்சியை அங்கிருக்கும் பெண் போட்டியாளர்களின் கன்னத்தை கிள்ளியும், நெற்றியில் முத்தம் கொடுத்தும் கொண்டாடி இருந்தார். இதை சமூக வலைதளத்தில் ஒருவர் ஆபாசமாகவும், இன்னொருவர் ரஞ்சித்தின் குழந்தை தனத்தை தெரிவிப்பது போன்றும் எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஒரு விஷயம் நடந்தால் உண்மையாக அது என்ன சூழ்நிலையில் நடந்தது அங்கு இருந்தவர்களின் மனநிலை என்ன என்பது தெரியாமல் சிலர் சமூக வலைதளத்தில் தவறாக அந்த செயலை மாற்றி விடுகிறார்கள். நாம் இணையத்தில் பார்ப்பதெல்லாம் உண்மை கிடையாது. அங்கு நடந்த சம்பவம் வேறு விதமாக இருக்கும். அங்கு நடந்த பல விஷயங்களை எடிட் செய்துதான் குறைவாக டிவியில் காட்டி இருப்பார்கள்.
டிவியில் வருவதை மட்டும் பார்த்துக்கொண்டு இவர் இப்படித்தான் நினைத்தார் என்று யாரையும் நாம் முத்திரை குத்த கூடாது. இதை நான் சொல்வதால் என்னை ரஞ்சித்தின் பிஆர் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். நான் உண்மையை சொல்கிறேன் என்று அந்த வீடியோவில் ஏடிகே பேசி இருக்கிறார். இதை ரஞ்சித்தின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications