பிக் பாஸ் கலையரசனை அகோரியாக தெரியும், ஆனால்! ஐநா சபையில் பேசி இருக்கிறாராம்! செய்த சாதனை இத்தனையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பித்து நான்கு நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், போட்டியாளர்களின் தனிப்பட்ட கதைகளும், சவால்களும் அரங்கேறி வருகின்றன. இந்த சீசனில் அதிக கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவரான அகோரி கலையரசன், தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததற்கான உண்மையான காரணத்தை இரண்டாம் நாள் இரவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

பிக் பாஸ் வந்த காரணம்

போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த கலையரசன், தான் ஒருபோதும் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். அவர், "நான் கோப்பையை (Trophy) ஜெயிக்க பிக் பாஸுக்கு வரவில்லை. நான் இதுவரைக்கும் வாங்கிக் குவிச்ச கோப்பைகளை வைக்கவே என்கிட்ட இடமில்லை! நான் இங்கு வந்ததற்கான உண்மையான காரணம், என்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்வதுதான்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "நான் ஒரு அகோரியாக இருந்ததால், என்னுடைய பிள்ளைகள் 'அகோரியின் பிள்ளைகள்' என்று பார்க்கப்பட்டு, அவர்களுக்குப் பள்ளியில் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. என் குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும், என்னை நான் மாற்றிக்கொள்ளவும், இந்த அடையாளத்தை மாற்றிக்கொள்ளவும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன்" என்று கண்ணீர் மல்கக் கூறியது, சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையே ஒரு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தந்தையின் இந்தத் தியாகம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

அகோரி டு UN தூதர்

அதோடு கலையரசன் இன்னும் சில விஷயங்களை சொல்லி இருந்தார். அதுதான் இப்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் ஒரு முன்னாள் அகோரியாக இருந்த போதிலும், கலைத் துறையிலும், சமூக சேவையிலும் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். கலையரசன் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இளைஞர் சங்கம் மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளின் (United Nations International Youth Society and Sustainable Development Goals) இளைஞர் தூதுவராக (Youth Ambassador) சென்று பேசிவிட்டு வந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதுபோல நாட்டுப்புற கலைகளில் சாதனை படைத்ததற்காகப் பல கின்னஸ் சாதனைகள் செய்திருக்கிறாராம். தன் கண்களின் இமைகள் வழியே ஊசிகளைக் குத்திக்கொண்டு கரகாட்டம் ஆடியது போன்ற சவாலான நிகழ்ச்சிகளைச் செய்து, சாதனை படைத்திருக்கிறார். மதிப்புறு முனைவர் (Honorary Doctorate) பட்டமும் பெற்றிருக்கிறார். சமூக ஊடகங்களில் அவர், 'கிராமியப் புதல்வன் அகடமி'யின் நிறுவனர் என்று தன்னைப் பற்றி கலையரசன் பேசியதை கேட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் இவர் அகோரி என்று தான் ஸ்பெஷல் மீடியாவில் பலருக்கும் தெரியும் ஆனால் இவருக்கு இவ்வளவு திறமைகள் இருக்கிறதா என்று பலரும் உயர்ந்து வருகிறார்கள்.

இப்படிப் பல சாதனைகளைக் குவித்த ஒரு கலைஞர், தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள ஒரு ரியாலிட்டி ஷோவைத் தேடி வந்தது, அவரின் வாழ்க்கைப் போராட்டத்தைக் காட்டுகிறது.

அதிக வாக்குகள்

ஆனால், கலையரசன் இவ்வளவு பெரிய உருக்கமான கதையைப் பேசினாலும், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இந்த சீசனின் முதல் நாமினேஷன் பட்டியலில், கலையரசன் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு எதிராக 12 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவரைத் தொடர்ந்து, 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் ஏழு வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

போட்டியாளர்கள் விதிகளை மீறியதற்காகப் பிக் பாஸ் கொடுத்த தண்டனைகளைச் சந்தித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கலையரசன், முதல் வாரத்திலேயே எவிக்‌ஷன் அபாய வளையத்துக்குள் வந்திருப்பது, அவரின் ரசிகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சி, தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியிலும், 24x7 ஜியோசினிமாவிலும் ஒளிபரப்பாகிறது. அடையாளத்தை மாற்ற வந்த அகோரி, முதல் வாரமே வெளியேறுவாரா அல்லது அவரின் உருக்கமான கதை அவரைப் பிழைக்க வைக்குமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+