பிக்பாஸ்க்காக மேலும் கடன் வாங்கியிருக்கிறேன்...தாமரையின் கதறல்.. இவ்வளவு பணமா செலவாச்சு
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தாமரைச்செல்வி தன்னுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்கிறார்.
அல்டிமேட் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதற்காக கடன் வாங்கி செலவு செய்து இருப்பதாகவும் தன்னுடைய சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடங்கிய அல்டிமேட் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இந்த நிகழ்ச்சி இருந்தாலும் இதில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு இருப்பது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாக இருந்து வருகிறது. இதில் ஒவ்வொரு சீசனிலும் இதற்கு முன்பு கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வதால் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக இருந்து வருகின்றனர்.

அது எல்லாம் பொய்யாம்
vதற்போது பிரமாண்டமாக நடந்துமுடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு தற்போது பரிச்சயமான முகமாக மாறி இருக்கும் தாமரைச்செல்வி கிராமத்து பின்னணியில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதியும் இல்லாத ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இவர் இன்று பலருக்கும் பரிச்சயமான முகம் ஆக மாறி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவருக்கு அதிகமாக கடன் இருந்து உள்ளதாம், ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவர் அதிகமாக சம்பாதித்து விட்டதாக பலரும் கூறி வருகிறார்கள் அது எல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்.

நிஜமாகவே அது இல்லையாம்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒருமுறை ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதில் தாமரைச்செல்வி அணி வெற்றி பெற்றது. அப்போது அவருக்கு அடுப்பு பரிசாக அளிக்கப்பட்டது. அப்போது எங்க வீட்டில் இந்த அடுப்பு இல்லை என்று சந்தோஷமாக அவர் கூறியிருந்தார். ஆனால் அதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பல நெகட்டிவ் கமெண்டகள் எழுந்து வந்தது. அது எப்படி அடுப்பு இல்லாமல் இருக்கும் என்பது பலருடைய வாதமாக இருந்தது. அதை பற்றி நேற்றைய எபிசோட்டில் தாமரைச்செல்வி சக போட்டியாளர்கள் இடம் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார். உண்மையில் தன் வீட்டில் இந்த மாதிரி அடுப்பு இருந்தது கூட கிடையாதாம்.

இவ்வளவு கடனா
தன்னுடைய அம்மா வீட்டிலும் இன்னும் விறகு அடுப்பில் தான் சமையல் செய்து கொண்டிருக்கிறார்களாம். அதனால் தான் தனக்கு அடுப்பு பரிசு கிடைத்ததும் உண்மையில் அந்த எக்ஸ்பிரஷன் காட்டி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு ஏற்கனவே கடன் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மேலும் இரண்டு லட்சம் கடன் வாங்கி தான் டிரஸ் நகைகள் எல்லாம் வாங்கி இருக்கிறாராம். இந்த நிலையில் தான் இருக்கும் போது தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் கிளம்பி வருவதை நினைக்கும் போது சிரிப்பாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications