
பிக்பாஸ் அல்டிமேட்: முதல் நாளே ரசிகர்களை கடுப்பாக்கிய செயல்கள்..ஆரம்பமே இப்படியா, பறக்கும் மீம்ஸ்கள்
சென்னை: பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் நாளே நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளே இவ்வளவு கமெண்டுகளை பெறும் என்பது யாரும் எதிர்பார்க்காதது என்று பலரும் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட்: தன்னுடைய வேலையை தொடங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி.. மாட்டிக்கொண்ட தாமரைச்செல்வி

பிக்பாஸ் அல்டிமேட் அறிமுகம்
பிக் பாஸ் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தொடங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை மிஸ் பண்ணி வந்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி புது முறையாக அறிமுகம் ஆனது.இது ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வரும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் புதுமுகங்கள் யாரையும் அறிமுகப்படுத்தாமல், இதுவரைக்கும் நடந்து முடிந்த ஐந்து சீசன்களிலிருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளர்களை மட்டுமே இதில் களம் இறங்கியுள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இதுதான் பிளஸ் பாயிண்ட் என்று கூறிவந்த செயல் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக இருக்கிறது என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில திருத்தங்கள் செய்யப்பட்டு
பிக்பாஸ் வீட்டிற்குள்ளே மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தாலும், ரசிகர்கள் அதிகமானோர் இதற்கு முதல் நாளிலே ஆதரவு கொடுக்கத் தொடங்கி விட்டனர். மீதமிருக்கும் நாட்களில் ரசிகர்களை கவரும் விதமாக புதியதாக ஏதேனும் செய்வார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கமல் பேசிய வார்த்தைகள்
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்களில் நாமினேஷன் செய்யும் டாஸ்க் ஆரம்பித்துவிட்டது. அதுபோல போட்டியாளர்களுக்குள் சில கருத்துவேறுபாடுகள் முதல் நாளே தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதை ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்து வந்திருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கூட்டும் விதமாக கமல் பேசிய வார்த்தைகள் தற்போது நெட்டிசன்களால் கலாய்த்து அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

முதல் நாளில் நடந்த செயல்
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் மட்டுமே எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நடப்பதை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்து வருகிறார்கள். அதனால்தான் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு போட்டியாளர்கள் தூங்கும் காட்சிகள் மட்டுமே பல மணி நேரமாக ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளது. அதுபோல காலை வேளையில் சினேகன் முதல் ஆளாக எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அதை மட்டுமே சுமார் இரண்டு மணி நேரங்களாக ஒளிபரப்பாகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதை வைத்து பல மீம்ஸ் கிரியேட்டர்கள், வீடியோவையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இவ்வளவு அக்கப்போரா?? அப்படியானால் இனி இப்படித்தான் தினமும் இருக்கப் போகிறதா?? என்றும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.