தாமரையின் வீட்டைப்பற்றி அவரே சொன்ன பதில்...இதுதான் உண்மையாம்.. தாமரைக்கு இப்படி ஒரு நிலைமையா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னுடைய வீட்டின் உண்மை நிலவரத்தைப் பற்றி தாமரைச்செல்வி கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பலர் தான் வசதியாக வாழ்ந்து வருவதாக காட்டி வருவதால் அவர்களுக்கு தாமரைச் செல்வி பதிலடி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக்பாஸ் ஐந்தவது சீசன் நிகழ்ச்சியின் மூலமாக அனைவருக்கும் பரிச்சயமான போட்டியாளராக மாறி இருக்கும் தாமரைச்செல்வி இந்த நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு நாடகக் கலைஞனாக ஒரு சில குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பரிச்சயமானவராக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு மூலமாக தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இதுவரைக்கும் அவரைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாதவர்கள் இந்த நிகழ்ச்சியில் இவருடைய பர்பாமன்ஸ் பார்த்ததும் அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அப்போது ஒரு சிலர் இவரை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்களாம்.

ரசிகர்களின் உதவி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் முடிவடைந்த பிறகு இவர் வெளியே சென்ற பிறகுதான் இவரைப்பற்றி எப்படி எல்லாம் சிலர் பேசி வருகிறார்கள் என்பது தெரிந்துள்ளது. அதனால் மன வேதனை அடைந்த இவர் தற்போது பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருப்பதால் அங்கே பேசியிருக்கிறார். தான் பெரிய வீட்டில் வாழ்ந்து வருவதாக அனைவரும் கூறி இருக்கிறார்கள். ஆனால் அந்த வீடு 20 லட்சம் கடனோடு கட்டப்பட்ட வீடு. பேங்கில் தான் லோன் போட்டு அந்த வீடு கட்டப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் அந்த வீடு கட்டியதால் தான் பல நாட்கள் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு உள்ள போது ரசிகர்கள் தான் தனக்கு உதவி உள்ளதாக கூறி இருக்கிறார்.

உண்மை இதுதானாம்
தாமரைச்செல்வி நாடகத்திற்கு சென்று வருவதால் வாடகை வீட்டில் தான் ஆரம்பத்திலிருந்து வாழ்ந்துள்ளாராம். அப்போது அங்கே ஏற்படும் சில பிரச்சனைகளால் இவர் பல வீடுகளை மாற்றி இருக்கிறாராம். தொடர்ந்து இப்படி வீடுகளை மாற்றிக் கொண்டிருப்பதால் தான் இவருக்கு தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று வைராக்கியம் ஏற்பட்டதாம். அப்போது ரசிகர்கள் பலர் இவருக்கு உதவி செய்ததால் ஆரம்பத்தில் வீட்டு வேலையை தொடங்கியிருக்கிறார். பின்னர் பேங்க் லோன் போட்டு வீட்டு வேலையை முடித்து இருக்கிறார். ஆனால் இன்னும் கட்டி முடியவில்லை என்று கண்ணீரோடு கூறியிருக்கிறார்.

தாமரையின் மனக்குமுறல்கள்
கேள்வி மட்டுமல்லாமல் தாமரைச் செல்வியின் அம்மா இருக்கும் வீடும் ஓலைக்குடிசைதானாம். ஆனால் அதையும் கூட அவர் அந்த ஓலைக் குடிசையின் பக்கத்தில் பெரிய வீட்டில் வசித்து வருவதாகவும், ஓலை வீடு அவர்கள் சமையல் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வீடு என்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எதையாவது பற்றி சொல்ல வேண்டும் என்றால் கொஞ்சமாவது நியாயமாக சொல்ல வேண்டும். கொஞ்சம் கூட உண்மை இல்லாத வகையில் சமூக வலைத்தளத்தில் பேசுவார்கள் என்று தாமரைச்செல்வி பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா மற்றும் பாலாஜியிடம் தன்னுடைய மனக்குமுறல்களை கொட்டியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications