அமுதவாணனுக்கு ஊர் மக்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பு.. மகன்கள் செய்த செயல்.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அமுதவாணன் முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பணப்பெட்டியில் வைக்கப்பட்ட 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறி இருந்தார்.

கடைசி வாரத்தில் அமுதவாணன் தானாக விருப்பப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்த நிலையில் அவருடைய ஊர்காரர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.

விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவியில் பிரபலமான நபராக இருக்கும் அமுதவாணன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய காமெடி திறமையினால், பலருக்கும் ஃபேவரைட்டாக ஆகி இருந்தார். அதற்குப் பிறகு டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை மேலும் மெருகேற்றி இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அமுதவாணன் கலந்து கொண்டிருந்தாலும் தனக்கு இன்னும் அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்றும் தன்னுடைய நிலை இன்னும் மாற வேண்டும் என்று கூறி பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி ஆரம்பமான புதியதில் இவருடைய காமெடி நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது.

திறமைக்கு பாராட்டு

திறமைக்கு பாராட்டு

நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சண்டை சச்சரவுகள் அதிகமாக ஏற்பட தொடங்கிய நேரத்தில் அதில் சளைக்காமல் பங்கு பெறும் ஒரு நபராக அமுதவாணலும் இருந்து வந்தார். ஆனாலும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பிக் பாஸ் வீட்டை மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் வைத்துக் கொள்வதில் இவருடைய பங்கும் இருந்து வந்தது. இந்த நிலையில் இவர் பல முறை நாமினேஷனில் வந்திருந்தாலும் ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு கடைசி வாரம் வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இவர் இருந்து வந்தார். பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இவருடைய திறமையை பாராட்டி வந்தனர்.

டாஸ்க்களில் வெறித்தனம்

டாஸ்க்களில் வெறித்தனம்

டாஸ்குகள் என்று வந்துவிட்டால் என்னை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்லும் வகையில் அமுதவாணன் போட்டி போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். தன்னைவிட வயது குறைவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி நான் விடாமல் போராடுவேன் என்று இவருடைய விடாமுயற்சியை அனைவருக்கும் காட்டிக் கொண்டிருந்தார். அதுவும் குறிப்பாக இவருக்கு நடிப்பு மட்டும் தான் தெரியும் என்று இல்லை, விளையாடவும் தெரியும் என்று ரசிகர்களுக்கு எனக்கு விளையாடவும் தெரியும் என்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெறித்தனமாக விளையாடி அந்த டாஸ்கை வெற்றி பெற்றிருந்தார்.

பிரமாண்டமாக வரவேற்பு

பிரமாண்டமாக வரவேற்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலம் அடைந்தது அமுதவாணன் மட்டுமல்லாமல் அவருடைய மகன்களும் தான். ஏற்கனவே அமுதவாணனுடைய மகன்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் அது அமுதவாணனுடைய மகன்கள் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களுடைய திறமையை பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து இப்ப வரைக்கும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அமுதவாணனுக்கு அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள்,ஊர்காரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வெகு விமர்சனமாக வரவேற்பு ஏற்படுத்திருக்கின்றனர். தாரை தப்பட்டையோடு, செண்டா மேளங்கள் முழங்க, வான வேடிக்கையோடு வரவேற்பில் அமுதவாணனின் மகன்கள் பட்டய கிளப்பி ஆட்டத்தை போட்டு கொண்டாடி இருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அமுதவாணன் பதிவிட ரசிகர்கள் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+