ஜட்ஜ் பண்றதுக்கு தகுதி இல்ல.. என்னை ரீப்ளேஸ் பண்றது ஈசி இல்லை! ரங்கராஜன் பற்றி வெங்கடேஷ் பட் ஓபன்
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட் பேட்டி ஒன்றில் தனக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக வந்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜனின் நல்ல கேரக்டர் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். அப்போது நான் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு இமேஜ் கிரியேட் செய்திருந்தேன் அதை யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாது. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னுடைய தனித்துவத்தால் மக்கள் மனதை கவர்ந்து விட்டார் என்று கூறி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி எபிசோடுகள் கூட முடிந்து விட்டது. இதன் டைட்டில் வின்னராக பிரியங்கா தேர்வாகிவிட்டார் என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் இந்த நிகழ்ச்சிக்கான கடைசி எபிசோடு இன்னும் ஒளிபரப்பாகவில்லை.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியே வந்தது பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. மணிமேகலை தான் விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று வீடியோ வெளியிட்டதும் அதைத் தொடர்ந்து பிரியங்காவிற்கு ஆதரவாக விஜய் டிவி பிரபலங்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு மணிமேகலை பிரியங்காவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பவர்களை செம்பு என்று விமர்சிப்பதும், பிறகு மணிமேகலைக்கு பதில் கொடுக்கிற மாதிரி விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ச்சியாக துடைப்பம், செருப்பு போட்டோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு இடையில் இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இப்போது நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி செஃப் வெங்கடேஷ் பட் என்ன நினைக்கிறீங்க என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். நான் நான்கு சீசன்களாக ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருந்தேன். என்னை ரீப்ளேஸ் செய்வது எளிமையான விஷயம் கிடையாது. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி என்னதான் நடுவராக இருந்தாலும் கோமாளிகள் கொடுக்கும் தொந்தரவுகள் குக்குகள் சமைக்கும் சமையல் என பல டென்ஷன் இருக்கும். அதையும் தாண்டி அவர் அந்த நிகழ்ச்சி முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
அதுபோல நான் எல்லாம் பொறுக்கி போல எப்போதும் அடுத்தவர்களை வாடா போடா இதை செய் என்று பேசி விடுவேன். அது எனக்கு அப்படியே பழகிவிட்டது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் அப்படி கிடையாது. அவர் நிகழ்ச்சியில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன் எல்லாரிடமும் மரியாதையாக பேசுகிறார். பொதுவாக எனக்கு கோயம்புத்தூர் காரங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க சின்ன குழந்தையா இருந்தா கூட மரியாதை தருவாங்க.
அதுபோல மாதம்பட்டி ரங்கராஜன் நிகழ்ச்சியில் எல்லோருக்கும் மரியாதையோடு நடந்து கொள்வதை பார்க்கும்போதே பிடிக்கிறது. ஒரு எபிசோடில் மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் இரண்டு கோமாளிகள் வேஷம் போட்டு இருந்தார்கள். அதில் மாதம்பட்டி ரங்கராஜன் பேச வருவது போலவும் அவரை தாமு பேசவிடாமல் அவரே பேசிக் கொண்டிருப்பது போல் எல்லாம் கலாய்த்து இருந்தார்கள். ஆனால் அதையும் அவர் சிரித்த முகமாகவே ஹேண்டில் பண்ணி இருக்கிறார்.
யாரையும் ஜட்ஜ் பண்றதுக்கு தகுதி கிடையாது. மாதம் பட்டி ரங்கராஜன் வரும் ஏப்ரல் மாதத்தில் புது படம் நடிக்க இருக்கிறார். அந்த படம் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications