குக் வித் கோமாளியில் தொகுப்பாளரும் மாற்றமா?? பீலிங்கில் ரசிகர்கள்
சென்னை: தற்போது விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றப்பட்டு உள்ளார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது.
இதுவரைக்கும் தர்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தநிலையில் அவருடைய ரசிகர்கள் அவரை அதிகமாக மிஸ் பண்ணி வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கின்றது. ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருப்பதால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

புது அறிமுகங்கள்
இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதில் பலருடைய பெயர்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதில் இதுவரைக்கும் இல்லாத பல குக்கள் அறிமுகமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கோமாளிகள் ஒரு சிலர் புதியதாக நுழைய இருக்கின்றனர். ஏற்கனவே இருந்த புகழ் இந்த நிகழ்ச்சியில் இல்லையா??என்பது அவருடைய ரசிகர்களால் அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியாக இருந்துவருகிறது. ஆனால் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று ஏற்கனவே தாமு குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் ஒரு சில வாரங்கள் மட்டுமே கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களிடம் ஆர்வம் அதிகரிப்பு
இந்த மூன்றாவது சீஸனில் அதிகமான போட்டியாளர்கள் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர்.விஜய் டிவி, சன் டிவி என பிரபலமான நடிகர் நடிகைகள் இதில் கலந்து கொள்கின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பல போட்டியாளர்களின் வாழ்க்கை எப்படியோ இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலருடைய வாழ்க்கையைத் டாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் இதில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்கள் இடம் தற்போது ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.

தொகுப்பாளர் மாற்றமா?
போட்டியாளர்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீசனை ரக்சன் தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற ஒரு சில செய்திகள் பரவி வருகிறது. அவருக்கு பதிலாக மாகாபா தான் இந்த சீசனை தொகுத்து வழங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தர்ஷனின் ரசிகர்கள் கண்டிப்பாக அவர்தான் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications